சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 27 ஜூன், 2012

என்னோடு நிழலாடும்...!

ஊமைவிழி சிந்துகின்ற 
உவர்துளிகள் நீயாக...
பேதை மன வாசலிலே
பெருக்கெடுக்கும் ஞாபகங்கள்...!

உயிரணுக்கள் ஓலமிட
உள்ளுணர்வு சாபமிட
நீ தொட்ட இடம் மட்டும்
நெஞ்சிக்குள் இனிக்கிறது...!

நீயறியா என்னகத்தில்
நீந்துகின்ற உன்நினைவு
மாசற்ற மழலைகளாய்
மனதோடு விளையாடும்..!

திசை இழந்த தென்றலுக்கு
திசைகாட்டி உன்விழிகள்
மதியிழந்த மனங்களுக்கு
மனச்சாட்சி உன் மொழிகள்...!

ஒற்றைச் சடையோடு
ஒருசாண் இடையசைய
ஊர்த்தேருக்கள் தேரேன்று
உனை இழுக்க வடம் தேடும்...!

வட்டக்கண் இமைதிறந்து
வாசல்பூ கோலமிட
வைகறைப் பொழுதுன்னை
வரவேற்க புலர்ந்து வரும்....!

வந்துவிடு நிலவாக....

என் வாழ்நாள் தோறும்
ஈரவிழி தீயிட்டு
இதயத்தை எரித்தாலும்
எந்நாளும் உன்நினைவு
என்னோடு நிழலாடும்...!
==================
ப்ரியமுடன்..சீராளன்..

கருத்துகள் இல்லை: