சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 28 ஜூன், 2012

தலையணையிடம் கேட்டுப்பார்...!உன்னால் எரிக்கப்பட்ட
மூங்கில் காட்டின் 
சாம்பல் மேடுகள்
இன்றும் சங்கீதம் இசைக்கின்றன....!


மனப் பொறிக்குள்ளே
நெருக்கப்படும் பிரிவின் வலி
உன் மணமேடை அலங்கரிப்பில்
தலைவாழை இலையானது.....!


இதயத்தில் மலரென்றேன்
இடுகாட்டில் வேர்விட்டு
கல்லறையை இடித்துவிட்டாய்....
மண்ணுக்குள்ளும் மனது வலிக்கிறது...!

வாழ்விடம் மாறினும்
வாசம் மாறிடா செவ்வந்தியே 
சிற்பிக்கு உயிர் கொடுத்த சிலை நீ 
சிதைக்கிறது நிஜாயமில்லை....!

வல்லினம் கலக்காத வாழ்த்து நீ
வாழ்வியலை மட்டுமேன்
வகையறா இலக்கணமாக்கி என்னை 
வதைக்கின்றாய் பிரிவுகளால்.....!

நாள்தோறும் கவி எழுதி
நனைத்தவளே சொல் 
சித்திரவதை செய்வதையா 
சிலேடைக் கவி என்றாய்.....!

ஒப்பனை செய்யாத ஓவியம் நீ
வர்ணம் தீட்டும் முன்பே 
வரைந்தவனை தொடமறுத்தால்
தூரிகைகளுக்கேன் தூக்கு மேடை....!

தவறுகளின் தாகத்தை-உன் 
தலையனையிடம் கேட்டுப் பார்
அறியாமல் கசிந்த கண்ணீர்
ஆயிரம் அர்த்தம் சொல்லும்.....! 

விதிவழி வாழ்வென்று 
வெறுத்து நீ போனாலும் 
வெந்துடல் எரிகையிலும் 
விழிமூடி ரசித்திருப்பேன் 
உன் எழில் தழுவல்களை ......!
............................................


ப்ரியமுடன் சீராளன் 

கருத்துகள் இல்லை: