சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 25 ஜூலை, 2012

எப்படி முடியும் ...!நொடிக்கொரு முறை விடியும்
என் இரவுகளுக்குள்...
தூங்காமல் நானும்...
ஏங்காமல் நீயும்....
எதிரும் ,புதிருமாய்
ஏமாற்றங்கள் எமக்குள்ளே......!

விலகிட நினைக்கையில்
விழிகள் திறக்கிறாய்..
அழிந்திட நினைக்கையில்
அழுது தொலைக்கிறாய்...
எப்படி முடியும்
உன் நினைவின்றி சாவதற்கு..!


வாழ்வை ரசிக்க சொன்ன
உன் உதடுகளுக்குள்
ஊமையாய் போனது
உன்னோடு பேசிய
ஒவ்வொரு நொடிகளும்...!

இருந்தும் மகிழ்கிறேன்
எனக்குள்ளே வாழும்
உன் ஒற்றை முத்தம்
உயிர்வரை வாழ்வதால்.....!
--------------------------------------
ப்ரியமுடன் சீராளன்

கருத்துகள் இல்லை: