சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 26 ஜூலை, 2012

ப்ரியமுடன் சுமக்கின்றேன்மேகத்தின் விழியொடுங்கி   
விதைக்கின்ற மழைநீரில்
மேனி நனைத்து நிற்க 
விழிநீரேன்  சுடுகிறது....?

ஒவ்வொரு அணுக்களிலும்
உன் பெயரை சுமக்கின்றேன்
ஒருபோதும் மறந்திடாதே
என்று சொல்லி போனாயே 
வெவ்வேறு திசைகளிலே
வேர்விடவா வழி மறந்தாய்...!

தூரப்பார்வைக்குள் 
தொக்கிநிற்கும் உன் உருவம்
விழிமடலில் ஒளிந்திங்கே 
வியர்வையிலே  ஒளிர்கிறது
சாட்சி மட்டும் கேட்க்காதே
மூச்சிலே சுமப்பதனால்
முடியவில்லை வில(ள)க்கிவிட....! 

உறவு நீ இல்லைஎன்று 
உயிர் பறித்து போனாலும் 
பிறவி நூறு எடுக்கையிலும் 
ப்ரியமுடன் சுமந்திருப்பேன் 
பேதை நீ தேடாதே....
ஒருதடவை வந்தாலும் 
உயிரோடு படிந்துவிட்டாய்...!
 
ப்ரியமுடன் சீராளன் கருத்துகள் இல்லை: