சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 26 ஜூலை, 2012

மண்ணிலும் மலர்வேன்.....!இதயச்சிதைவின் எச்சங்கள்
என்றும் காதலின் மிச்சங்கள்
விழிகள் சொன்ன சாட்சியங்கள் 
விளைந்திடவில்லை உன்னுதட்டில்...! வானம் உருக்கி மெளுகிடினும்
வாழ்க்கை எனக்கு பூச்சியமே
தேனை குழைந்து தந்திடினும்
தேவையற்ற பானம் நான்...!

காயை பூவில் தேடுகின்றாய்
காய்ந்து போன கண்ணோடு 
நேயம் இருப்பின் நினைத்துப்பார்
நிஜத்தில் முளைப்பேன் மண்ணோடு.....! 

சோலைப்பூக்கள் உன்னழகில்
சொல்லக் கூடும் பொய்யுரைகள்
காலைக்கதிரில் தேடிப்பார்
காற்றில் வருவேன் உனைச்சேர....!

மேடைப் பாட்டில் உன்பெயரை
மோனையாக சேர்த்ததனால் 
வாடைக்காற்றில் புதுவசந்தம்
உன் வாழ்க்கைதோறும் இது சந்தம்ப்ரியமுடன் சீராளன் 

கருத்துகள் இல்லை: