சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 3 ஜனவரி, 2013

புரியவில்லை புலன்களுக்கு ...!


வார்த்தையொன்று கவிதையாகி 
வாழ்வில் வந்தது 
சேர்க்கையற்ற  வெறுமை தந்து 
தேகம் சுட்டது..!

மூச்சி கொண்டு பேச்சை வாங்கி 
வேடம் கொண்டது 
மிச்சமுள்ள நாளை கொன்று 
எச்சில் மென்றது..!

ஒற்றைச் சடை ரெட்டை விழி 
பெற்றெடுத்த காதல் 
இற்று விட்ட இதய மேட்டில் 
எரியுதெந்தன் மூச்சில்

தொட்ட சுகம் இட்டவலி 
விட்டகலவில்லை 
மொட்டுதிர விட்ட கண்ணீர் 
வேர் வளர்க்கவில்லை...!

ஒட்டிவிட்ட உயிரின் மொழி 
ஊனில் நின்றது 
மெட்டி இட்டு வந்த மேகம் 
வெறுமை பொழிந்தது...!

இச்சை இல்லா எந்தன் வாழ்வில் 
எல்லாம் இருந்தது 
மிச்சமில்லா முத்தம் தந்து 
முழுதும்  கொன்றது...!

விட்டுப்பேசி விதியை சேர 
வியர்வை சிந்தினேன் 
பட்டுப்போகும் பால்யம் என்று 
பாதம் வேண்டினேன்...!

திட்டமிட்டா முடிவெடுத்தாய் 
தெரியவில்லை ஜீவனுக்கு 
கொட்டிவிட்ட வார்த்தையென்ன 
புரியவில்லை  புலன்களுக்கு....!   

பிரியமுடன் சீராளன் 

8 கருத்துகள்:

Unknown சொன்னது…

super sir

சசிகலா சொன்னது…

திட்டமிட்டா முடிவெடுத்தாய்
தெரியவில்லை ஜீவனுக்கு
கொட்டிவிட்ட வார்த்தையென்ன
புரியவில்லை புலன்களுக்கு....!

புரியாமலே இருக்கட்டும் அதனால் தானே எங்களுக்கு இவ்வளவு அழகான கவிதை கிடைத்தது.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சசி கலா எப்போது புரியுமோ அப்போது நிறுத்திக் கொள்கிறேன் மூச்சோடு இந்த முகாரியையும்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி செந்தில்குமார் வாருங்கள் தினமும் என்னுயிரின் ஓசை கேட்க

Yaathoramani.blogspot.com சொன்னது…


மனம் கவர்ந்த அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி ரமணி சார் என்னுயிரின் ஓசை கேட்டதற்கு மகிழ்வு கொள்கிறேன்

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

சீராளன் தந்த செழுந்தமிழைக் கண்ணுற்றேன்!
கூராளன் கொண்ட கவியாற்றல்! - பாராட்ட
எண்ணிப் படைத்தேன் இனிய தமிழ்வெண்பா!
நண்ணிப் படா்க நலம்!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களே

வலிகளை கிறுக்கி வைத்தேன்
வாழ்த்தி விட்டீர் வெண்பாவில்
நெஞ்சினிலே விஞ்சி நிற்கும்
நன்றிதனை பெற்றிடுங்கள்....!

என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் ,வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி ஐயா ..!