சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 10 ஜனவரி, 2013

தினம்தோறும் ராத்திரியில் ...!


தாயமுதத் தாகத்தில் 
சேயழுத கண்ணீராய் 
வாயடைத்தும் வெளிக்கசியும் 
வழமையான வலிச்சாரல் ...!

மெல்லினம் தழுவிய 
சொல்லினில் உயிர்பெறும் 
பெண்ணென இயமெலாம் 
போற்றிடும் பூவெல்லாம் ...!

கல்லினில் நீர்சுழி 
கரைத்திடும் கடிமையை 
சொல்லினில்  மொழிந்திட 
வில்விழி கருக்கொள்ளும் ..!

வேட்கையின் விசும்பல்கள் 
வியர்த்திட விழியினில் 
மீட்சியை விலைபேசி 
மெய்யறுக்கும் விரகதாபம்....! 

உறவின் நிலை உரிமையற 
பிறவினூறும் பேதம் தர 
உறங்குநிலை உயிலெழுதி 
உதடிரண்டும் ஓய்வுபெறும்...!  

உள்ளத்தின்  யன்னலிடை 
உயிர்ப்பூவும் வாசமிட 
உமிழ்நீரும் நஞ்சாகும் 
உறக்கத்தின் சலனத்தில்....!

இளங்கீற்றின் இசை படர்ந்து 
இதமாய் செவி நனைக்க
அதிகாலை விடிந்திருக்கும் 
அடுத்தநாள் கனவுதேடி ...! 

பிரியமுடன் சீராளன் 

2 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

அடுத்த நாள் விடிந்திருக்கும் கனவு தேடி
அழகுங்க வார்த்தைகள் பிரம்மிக்க வைத்தன.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சசி கலா