சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 13 August 2012

திருப்பிவிடு இதயத்தை...!

சொல்லக்கூடிய  
வார்த்தைகளுக்குள்
என் சோகம் 
எழுதப்படவில்லை
எழுதியதெல்லாம் 
உன்னைப்பற்றி என்பதால்
அழுகைகூட ஆனந்தமாகிறது...!

வாசிக்கும் வாய்க்கும்
வழிகாட்டும் விழிக்கும்
விளங்கவில்லை
வாசிக்கும் உன் மடல்
முட்களாய் மூளையை கிழிப்பது ...!

விழித் தெறிப்புக்குள்  
தலைகீழாய்
விதி எழுதும் சாட்சியத்தில்
நானும் கைதியாய்
நடிக்கக் கற்றேன்
தப்பிக்க முடியவில்லை...!

தாகம் அற்ற  நிலத்தில் 
தவறிவிழும் மழைத்துளிபோல்
வெயிலுக்கும் வேகாமல் போனது
தினம் உதிரும் கண்ணீர் துளிகள் ...!

வாழ்வும் ,சாவும்
வாழ்க்கைச் சலனங்களில் 
உயிர் குடிக்கும்
உத்தரவாதங்களுக்குள்
இன்னும் உயிர் வாழ்கிறது  தேடல் 
திரும்பிப் பார்த்தாவது
திருப்பிவிடு உன்னிதயத்தை 
மறுபக்கமாவது
மலரட்டும்  மனச்சாட்சியோடு.....!

ப்ரியமுடன் சீராளன் 

No comments: