சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நீ அவளிலில்லை ...!


நீ அவளிலில்லை
அவளைப்போல் இருக்கலாம்
ஆனால் அவளாகிடமுடியாது ..!


அவள் வர்ணக்கலவைக்குள்
வழுக்கிவிளுந்த வைரம்
இலக்கிய மரத்தின்
வார்த்தைப் பூக்களில்
இன்னும் வாடாத இதயப்பூ...!
சம்பிரதாய சடங்கின்
திருமணத்தீயில்
என்னவளின் உணர்வுகள்
ஆகுதியாக்கப்பட்ட
அர்த்தமற்ற அந்த நாள்
ஆயிரம்பேரை சேர்த்து
அகமகிழச் செய்திருக்கலாம்....!
அவளின் உயிரின் ஓரங்களில்
கசக்கிப்பிளிந்த கனவுகளைக்கூட
காகிதக் கடவுளால்
மண்டியிட வைத்திருக்கலாம் ..!
அவளும் இதயமில்லா
சமூக இழுக்காட்டை
எதிர்க்கமுடியா பேதையாய்
தலைகுனிந்து தாலிக்குள்
தள்ளப்பட்டிருக்கலாம்
அதற்காய் என்னவள் இல்லையென்று
எண்ணிடாதே...!
அழிந்துபோகும் அகிலத்தின்
எல்லா நிலைக்குள்ளும்
ஆதியான அமிர்த கலவையாய்
மூச்சுக்குள் முன்மொழியப்பட்ட
மூவுலகின் சுவர்க்கத்தில்
அர்த்தமுள்ள ஆரணி அவள் ...!
ஆதலால்
என்னவள் நினைவுகளோடு
மூடப்பட்டிருக்கும்
இதயக் கதவினைத்தட்டாதே
தேடிப்பார்
எங்கேனும் ஒரு யன்னலாவது
உனக்கென திறந்திருக்கும்
தென்றலை வீசியபடியே....!
ப்ரியமுடன்  சீராளன் 

5 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

அழிந்துபோகும் அகிலத்தின்
எல்லா நிலைக்குள்ளும்
ஆதியான அமிர்த கலவையாய்
மூச்சுக்குள் முன்மொழியப்பட்ட
மூவுலகின் சுவர்க்கத்தில்
அர்த்தமுள்ள ஆரணி அவள் ...!

மிக அழகிய வார்த்தைக் கோர்வை அவளுக்கான அறிமுகம் அசத்தல்.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சசி கலா பிரிந்துபோன தென்றலுக்கான தேடல்

பெயரில்லா சொன்னது…

''...எங்கேனும் ஒரு யன்னலாவது
உனக்கென திறந்திருக்கும்
தென்றலை வீசியபடியே....!''
ம்ம்...நன்று.
தொடரட்டும் பயணம்.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி வேதா

Unknown சொன்னது…

nice