சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அமிழ்தெம் மொழியெனப்பாடு ...!


                                


பேசும்போதும் வாசனைகள் -எம் 

பேச்சு மொழியினில் தான்

வீழும் வரைக்கும் கற்றுவிடு

வேற்று மொழியைக் கலக்காமல்....!  


அமிழ்தெம் மொழியென உணர்ந்திடு

ஆங்கில மோகத்தை துறந்திடு

நாவலர்,பாவலர்,நல்லோர்கள்

நாவினால் பொழிந்ததை ஏற்றிடு...!


கண்ணின் மணி போல் உயிரெழுத்து

அதை கண்டுநீ இமைத்திடு மெய் எடுத்து

மண்ணின் மறைகளாய் காப்பியங்கள்-அதை 

பெண்ணின் துணியெனக்காத்திடு...!


இடம்,பொருள்,ஏவல் பார்த்து

இலக்கிய சுவையை நாட்டு

விடம்,தணல்,வேட்கை நீக்கி-நம் 

இலக்கண நாவை காட்டு....!


புலம்பெயர் நாடெங்கும் பரப்பு - தமிழ்

பெயிரினில் உலாவிடல் சிறப்பு 

நலம்பெற தமிழினில் பேசு-அங்கே

நல்கலை,கலாச்சாரம் நாட்டிடல் உன் பொறுப்பு...!
கருத்துகள் இல்லை: