சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 10 செப்டம்பர், 2012

காதலின் கடைசி நாள்...!இளமையின்  இரத்தக்கசிவு
இன்று தொடக்கம் 
இதயத்தில் இறங்கிவிடும் ..!

சிறகுகள் அற்ற 
சிட்டுக்குருவியாய் வாழ்க்கை
பூக்களும் கேள்விகேட்கும் ..!

நிழல்களோடு தினமும் 
பேசிக்கொள்வதால்
தனித்திருக்கத்தான் பிடிக்கும்...!

அஞ்சன விழிகள் 
அடிக்கடி ஞாபகப் படுத்த
நெஞ்சில்  நினைவுகள் கோலம்போடும்...!

கண்ணீர் கசிவதை
கன்னங்கள் சொன்னாலும்
இதழ்கள் அர்த்தமின்றி சிரிக்கும்....!

நூறுமுறை படித்தாலும்
கடிதங்கள் மனதோடு
பதிந்திட மறுக்கும்.....!

வழமைக்குமாறாய் நேரமாற்றம்
அன்றாடக் கடமையோடு
அடிக்கடி சண்டைபோடும்.....!

சாகும்வரை சுமக்கப் போவதை
இறக்கிவிட எத்தனித்தே
இன்றுமுதல் தோற்றுக்கொள்வாய்......! 

ப்ரியமுடன் சீராளன் 
 

கருத்துகள் இல்லை: