சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Friday 28 February 2014

மௌனங்களின் மொழிபெயர்ப்புநாற்றோடும் வேரணைத் தேநீரும் நல்கின்ற
ஆற்றலே பச்சையத்தி னாதாரம் - ஊற்றாகி
உள்ளத்தில் சேர்க்கும் உனதன்பே  என்னுயிரில்
அள்ளி அளிக்கும் அமுது!

மாணிக்கப் பந்தல் மணக்கோலம் பூணுகையில்
நாணிக் குறுகிநின்றாள் நற்கனியாள் -வாணிக்கே
கற்பிக்கும் வண்ணவிழி கொண்டவளே ! என்பாட்டில்
சொற்சிறக்கப் பார்ப்பாய் தொடா்ந்து !

என்னுயிரில் என்றும் எழிலாடும்  உன்னுருவம்
பொன்னொளியில் மின்னும் பொலிவுடனே - என்றென்றும்
வண்ணவிழி எண்ணி வலிமேவும் நேரத்தும்
கொண்டல் பொழியும் குளிர்ந்து

கண்விட்டுப் போகும் கனவுகளின் எச்சங்கள்
புண்பட்டுக்  காயும் புலனழித்தே  - எண்ணத்தில்
இன்புற்றுப் பின்னழியும்  இல்லாதான் கற்பனைபோல்
உன்னுருவைத் தேடும் உணர்வு !

மொழிகள் முளைக்காமல் மௌனம் சுமந்தே
அழியா நினைவால் அறுத்தாய்  - இழித்தாலும்
முன்னல் எரிக்காதே  மூச்சோடும் போகாதே
உன்னோ டிருந்த உறவு !

இல்லாதான் காதல் இனத்தின் இழிசெயலாம் 
செல்வந்தன் சொல்லும்  நெறி

கொண்டல் - மேகம் 
முன்னல் - நினைவு ,நெஞ்சு 

பிரியமுடன் சீராளன் 

15 comments:

அம்பாளடியாள் said...

ஆஹா .....
கவித்தேன் உண்டு களித்தேன்
வண்டமிழுக்கு வாய்த்த வரமோ
சீராளன் தந்த நற் சீரடிகள் .....!!!!!!
வியந்தேன் வாழ்த்துரைத்தேன்
வழுவாமல் பற்றுகவே செந்தமிழை வளர்த்து .

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

காணொளி பாட்டு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

ரசிக்க வைக்கும் வரிகள்
காணொளிப் பாடல் மிக அருமை
வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்

Iniya said...

வணக்கம் சீராளா !

கண்விட்டுப் போகும் கனவுகளின் எச்சங்கள்
புண்பட்டுக் காயும் புலனழித்தே - எண்ணத்தில்
இன்புற்றுப் பின்னழியும் இல்லாதான் கற்பனைபோல்
உன்னுருவைத் தேடும் உணர்வு !

நெஞ்சை உருக்கும் வரிகள்!

நினைவுகளின் நிழலில் எழிலாய்
வாழும் எண்ணம் கொண்டு
வடிக்கும் வண்ணங்கள்
வலியை நீக்கி நெஞ்சில்
நிறைக்கட்டும் நிம்மதியை
நெடுநாள் நிலைக்கட்டும்!

அருமை அருமை வாழ்த்துக்கள்....!

sury siva said...

அழகான கவிதை இது.
ஆடச்செய்கிறது என் உள்ளத்தைப்
பாடச் செய்கிறது.

காவடிச் சிந்து மெட்டில் பாடலாமா ?

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

சீராளன்.வீ said...

இனிய வணக்கம் சகோ அம்பாள் அடியாளே!

தங்கள் வரவும் கருத்தும் வாழ்த்தும்
மனநிறைவைத் தருகிறது சந்தோசம்
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

இனிய வணக்கம் தனபாலன் சார்

தங்கள் ரசனைக்கு நன்றிகள் இனிய பாடல் எனக்கும் அது பிடிக்கும் !
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வாருங்கள் ரூபன் !

தங்கள் வரவும் கருத்தும் வாழ்த்தும்
கண்டு மகிழ்கின்றேன் மிக்க நன்றி

இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ இனியா !

நெஞ்சே உருகியதால் நினைவுகள் மணக்கிறது !

தங்கள் அன்பு நிறைந்த கவிதைக்கும் கருத்துக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

இனிய வணக்கம் சுப்பு தாத்தா

ஆடச் சொன்னால் ஆடுங்கள் பாடச்சொன்னால் பாடுங்கள்
உங்களுக்கு பாட்டு நல்லா வரும் !
இல்லையா தாத்தா !
தங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் !
மிக்க நன்றி

இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

ஹிஷாலி said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

சீராளன்.வீ said...

இனிய வணக்கம் ஹிஷாலீ !

தங்கள் வரவும் கருத்தும் வாழ்த்தும்
மனநிறைவைத் தருகிறது சந்தோசம்
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

vanathy said...

Super. Enjoyed it.

சீராளன்.வீ said...

வணக்கம் வானதி !

தங்கள் ரசனைக்கு நன்றி
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்