சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வெள்ளி, 12 ஜூலை, 2013

இருப்பாயா என் தேவதையாய்...!
ஒரு சொல் 
உயிர்வரை ஊடுருவி
மூளைக்குள் முகாமிட்டால் 
வார்த்தையல்ல அது
வாழ்வின் சரிதம்..!


பிரிதல்கள் 
உணரப்படும்வரை
கண்கள் நனைவதில்லை 
கண்கள் நனையும் போது
காத்திருப்புக்கள்
கவிதைகளாகின்றன
மனசுக்குள் இன்னொரு 
மனசை தேடியே...!

எனக்குள்ளும் கவிதைகள் 
கற்பமாகின்றன
பிரசவிப்பில்
உன்னைத்தான் தேடுகின்றேன்
ஏனெனில் 
ரசிக்கத் தெரிந்தவள் என்பதால்
வளர்த்திட 
உன்னால்மட்டுமே முடியும்....!

கனவில்கூட 
நீ என்னைப்பிரிந்துவிடில் 
காற்றுக்கூட என்னை
காயமாக்கும் 
காலம் என்னை சாகடிக்கும்
என் கவிதை வாழ்வும் 
காணாமல் போகும்
ஆதலால்
இருப்பாயா என் தேவதையாய்
எப்போதும் ரசித்துக் கொண்டே...!

பிரியமுடன் சீராளன் 

10 கருத்துகள்:

வெற்றிவேல் சொன்னது…

அழகான கவிதை... எப்ப்போதும் அவள் உன் தேவதையாய் இருப்பாள்.... நல்வாழ்த்துகள்...

Priya சொன்னது…

//கனவில்கூட
நீ என்னைப்பிரிந்துவிடில்
காற்றுக்கூட என்னை
காயமாக்கும்
காலம் என்னை சாகடிக்கும்
என் கவிதை வாழ்வும்
காணாமல் போகும்
ஆதலால்
இருப்பாயா என் தேவதையாய்
எப்போதும் ரசித்துக் கொண்டே...!// மிகவும் அருமை அண்ணா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்வின் சரிதத்தை ரசித்துக் கொண்டே இருக்கிறேன்...

வாழ்த்துக்கள்...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…வணக்கம்!

இருந்தாள் இருப்பேன்! இலையெனில் என்வாழ்வு
ஒருநாள் நகருமோ ஓது! - கருத்தாழம்
மிக்க கவிதையை மீட்டுகின்ற சீராளன்
சொக்கும் தமிழின் சுடா்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Seeni சொன்னது…

arumai..!

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி இரவின் புன்னகை தங்கள் வரவும் வாழ்த்தும் மகிழ்வைத்தருகின்றன

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி பிரியா தங்கள் வரவும் வாழ்த்தும் மகிழ்வைத்தருகின்றன

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் தங்கள் வரவும் ,ரசனையும் வாழ்த்தும் மகிழ்வைத்தருகின்றன

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி திரு.கி.பாரதிதாசன் கவிஞரே தங்கள் வரவும் ,வெண்பா வாழ்த்தும் மகிழ்வைத்தருகின்றன

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சீனி தங்கள் கருத்தும் மகிழ்வைத்தருகின்றன

வாழ்கவளமுடன்