சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 27 மே, 2013

எப்போதும் உன்னருகில்..!


கோபப்படும் 
உன் மூச்சைக் கூட
குளிர்மையாக்கி என்னில் 
கொட்டிச் செல்வதால்
உன்னைவிட என்னை 
ரசிக்கத்தெரிந்தவள் தென்றல்தான் ....!


ஒதுக்கப்படும் 
உன் காதலினால் மட்டும் அல்ல 
களங்கமில்லா 
உன் கார்குழல்கள் 
அறியாமல் தவறுவதால் கூட 
இப்போதெல்லாம் 
ரோஜாக்கள் 
கறுப்பாகவும் பிறக்கின்றன
தவிப்புக்கள் 
தாவரங்களுக்கும் உண்டாம்.....!

ராகங்களைத் தொலைத்தே
அழுகின்ற பாடல்களாய்
அர்த்தங்களை தேடும்
காதலில்லா வாழ்க்கையின் 
கர்ப்பங்களில் 
கசங்கிக் கொள்ளும் 
உன்னதங்களால் 
பூமியின் அடிப்பாகம் வரை 
கண்ணீரின் ஈரம்
நமக்குள் மட்டும் கோடைவெயிலாய் 
கொளுத்தும் கொள்கைகள் ....!

சொல்லிக்கொள்ள 
வெட்க்கப்படும்
சொல்லாத சிணுங்கல்களில்
ஆயிரம் கனவுகள் விதைத்து 
அத்தனையும் எரிமலையாய்
எனக்குள்ளே புதைத்தவளே 
ஓய்வு கிடைத்தால் 
ஒதுங்கி நின்றாவது பார்
உயிர் எரியும்போது 
உன் பெயர் கேட்க்கும் ...!

கார்கால மேகங்களாய் 
கரைந்தே நான் போனாலும் 
மறந்தும் நீ 
மனதுக்குள் அழவேண்டாம்
இறந்தாலும் இருப்பேன்
எப்போதும் உன்னருகில்
கனவிலும் உன் கண்கள்
கலங்கிடாமல் பார்த்த படியே...!

பிரியமுடன் சீராளன் 

14 கருத்துகள்:

Priya சொன்னது…


கார்கால மேகங்களாய்
கரைந்தே நான் போனாலும்
மறந்தும் நீ
மனதுக்குள் அழவேண்டாம்
இறந்தாலும் இருப்பேன்
எப்போதும் உன்னருகில்
கனவிலும் உன் கண்கள்
கலங்கிடாமல் பார்த்த படியே...!///அருமை

அம்பாளடியாள் சொன்னது…

சொல்லிக்கொள்ள
வெட்க்கப்படும்
சொல்லாத சிணுங்கல்களில்
ஆயிரம் கனவுகள் விதைத்து
அத்தனையும் எரிமலையாய்
எனக்குள்ளே புதைத்தவளே
ஓய்வு கிடைத்தால்
ஒதுங்கி நின்றாவது பார்
உயிர் எரியும்போது
உன் பெயர் கேட்க்கும் ...!

அருமை !....சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ உண்மைக் காதலின் வலிகள் கவிதை வரிகளாக இங்கே !!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரைவில் நல்லது நடக்க வாழ்த்துக்கள்...

சீராளன்.வீ சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி ப்ரியா....

வாழ்த்துக்கள்

சீராளன்.வீ சொன்னது…


எல்லாம் காதலின் மீதங்கள்
எரிந்தும் எரியாமல் எப்போதும் என்னோடு..!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி அம்பாள் அடியாள்

வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…


நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையில் நடப்போம் எப்போதும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்

வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்

கவியாழி சொன்னது…

ரோஜாக்கள்
கறுப்பாகவும் பிறக்கின்றன
தவிப்புக்கள்
தாவரங்களுக்கும் உண்டாம்.....!
ஆஹா ..அருமை தொடருங்கள்

வெற்றிவேல் சொன்னது…

அழகான கவிதை!!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....காலம்தாழ்த்திய பதிலுக்கு மன்னிக்கவும்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி இரவின் புன்னகை தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும், முதல்வருகைக்கும் ....காலம்தாழ்த்திய பதிலுக்கு மன்னிக்கவும்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் வாழ்த்துக்கும் ....காலம்தாழ்த்திய பதிலுக்கு மன்னிக்கவும்

வெற்றிவேல் சொன்னது…

இரவின் புன்னகையில் வருகையைக் கண்டேன்... மிக்க மகிழ்ச்சி...

சீராளன்.வீ சொன்னது…

வந்தேன் அழகிய கவிகள் கண்டேன் மீண்டும் வருகிறேன்...

வாழ்த்துக்கள் தொடர...