சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 20 மே, 2013

உயிரின் இதழ் நீ ..!சொந்தத்தின் பந்தத்தில்
வந்துதித்த வளர்பிறை நீ
தந்தை வழி உறவென்று
தள்ளி நின்றாய் தாய்மடியில்...!


விந்தை உலகத்தின்
சந்தை தெருக்களிலே
கந்தை கட்டி போனாலும்
தந்தை என்றும் தந்தையடி..!

அற்புதம் நிறை அணங்கே
சிற்பமே செழுமலரே
கற்புள்ள கண்ணாலே
கசக்கியதேன் என்னுயிரை ..!

நாவுக்குள் வேகும் காதல்
நோவுக்குள் நோவை மென்று
தாவிட துடிக்கும் மூச்சை
பாவியாய் பார்த்தாய் கொடுமை  ..!

திகழ் ஒளியின் தேவதை நீ
நிகழ இதழின் வாசம் நீ
புகழ் இலா பொக்கிசம் நீ
மகிழ் இனிய மனப்பூவே....!

உழலும் மெய் வாழ்வின்
சுழலும் என் கனவுகளில்
தழல் பூக்கும் வாசலேகி
கழல்கள் பதித்து செல்லாயோ...!

ஆற்று மணல் மேடும்
சேற்றுநில தாமரையும்
நேற்றுவரை அழுகிறதே
ஆற்றுதல் உன் மூச்சென்று..!

தள்ளிநின்று புன்னகைத்த
தாழ்வாரம் நனைகையிலே
கள்ளமாய் நீ தந்த
கடிதங்கள் கரையுதடி ..!

தித்திக்க வைத்தே
திகைப்பூட்டும் வார்த்தை வேண்டாம்
திட்டியாவது விட்டுப்போ
தினம்தோறும் காத்திருப்பேன் ..!

எட்டி எட்டிப் பார்த்தே
எங்குமில்லை என்றபோதும்
வெட்டிவிட நினையேன்
வேகின்ற வரை உன்னை ..!

பிரியமுடன் சீராளன்

திகழ் ஒளி - தானே விளங்கும் ஒளி ( சுயம்பிரகாசம்)
நிகழ்- பூ,மலர்
மகிழ் - மகிழ்ச்சி,மகிழம் பூ
கந்தை - கசங்கிய துணி
கழல்கள் - பாதங்கள்
அணங்கு - அழகு; வடிவு, தெய்வமகள்
தழல் - நெருப்பு,

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

''..எட்டி எட்டிப் பார்த்தே
எங்குமில்லை என்றபோதும்
வெட்டிவிட நினையேன்
வேகின்ற வரை உன்னை ..!''
அப்பப்பா! பொல்லாத காதல்!.......
மனம் கவர்ந்த வரிகள்...
வேதமா. இலங்காதிலகம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு சொல்லாடல்...!

ரசித்தேன் பலமுறை...

/// தித்திக்க வைத்தே
திகைப்பூட்டும் வார்த்தை வேண்டாம்
திட்டியாவது விட்டுப்போ
தினம்தோறும் காத்திருப்பேன் ..! ///

அப்படிச் சொல்லுங்க...!

வாழ்த்துக்கள்...

சீராளன்.வீ சொன்னது…

ஆமாம் பொல்லாத காதல்தான்......
உயிரின் ஓசை அல்லவா அவள்...

மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

அப்படியேதான் சொல்லிக்கொண்டிருக்கேன் ஆனால் இன்னும் வரவில்லையே....

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும்

வாழ்கவளமுடன்

Priya சொன்னது…

//திகழ் ஒளியின் தேவதை நீ
நிகழ இதழின் வாசம் நீ
புகழ் இலா பொக்கிசம் நீ
மகிழ் இனிய மனப்பூவே....!// தமிழின் அழகு சொக்கி நிக்கிதண்ணா... சொல்ல வார்த்தைகளே இல்லை

இளமதி சொன்னது…

புகழ் தருதே புவியும் போற்றுதே
நிகழ் வாழ்வில் நீ மகிழ்வதைக்கண்டு
திகழ்ந்திடு திடமுடன் தீயதை மறந்திடு
மகிழ்ந்திடு உன்னுயர்வு உன்னிடமே!

சீராளரே!...
சிந்தை நிறைக்கின்ற சீரான கவிதந்தீர்
எந்தன் மனமுவந்த வாழ்த்துக்கள்!!!

வாழ்க வளமுடன்!.

சீராளன்.வீ சொன்னது…

தங்கள் வருகையும்,தாங்கள் ரசித்த வரிகளும் கண்டு மகிழ்கின்றேன்

மிக்க நன்றி ப்ரியா

சீராளன்.வீ சொன்னது…

கவிதைக்கு கவியினிலே வாழ்த்துரைத்த
கனியிலும் இனிய என் சகோதரியே
காலமெல்லாம் நன்றி சொல்வேன்
கருத்திடும் உந்தன் கண்ணியம் சுமந்தே,,,!

மிக்க நன்றி சகோ இளமதி
தங்கள் வருகையும் இனிய கவி வாழ்த்தும் என்னை மிகமகிழ வைக்கின்றது

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

ஹிஷாலி சொன்னது…

அழகிய கவிதை அதற்கேற்றார் போல் தமிழ் விளக்கம் அருமை

திகழ் ஒளியின் தேவதை நீ
நிகழ இதழின் வாசம் நீ
புகழ் இலா பொக்கிசம் நீ
மகிழ் இனிய மனப்பூவே.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி SRH தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வாழ்கவளமுடன்

அம்பாளடியாள் சொன்னது…

அழகான வலைத்தளம் ......!!!!!! அருமையான பகிர்வும் கூட வாழ்த்துக்கள்
சகோதரரே .......

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி அம்பாளடியாள் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வாழ்கவளமுடன்

பெயரில்லா சொன்னது…

''..நாவுக்குள் வேகும் காதல்
நோவுக்குள் நோவை மென்று
தாவிட துடிக்கும் மூச்சை
பாவியாய் பார்த்தாய் கொடுமை ..!
காதல்
....காதல்
....Vetha.Elangathilakam.