சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Friday 17 May 2013

உனக்கென இருப்பேன்...!

சந்தேக நிழல் உன்னில்
தவறி விழுந்திட 
சித்திரம் ஒன்று 
சிதைந்தது நெஞ்சில்..!


ஒப்பனையற்ற 
உயிர்பபூவாய்
உள்ளுக்குள் 
வாழ்ந்தவளே
செத்திடத் தோணும் 
சிற்றறிவின்
முற்றிய நிலைக்கு 
முலாம் பூசவா
புன்னகைத்தாய்...!

அர்ச்சனையில் 
பூக்களும்
கற்பனையில் 
கவிதைகளுமாய் 
அள்ளித் தெளிக்கும் 
அத்தனை நிகழ்வும்
கொள்ளை அழகுன்னில்
கொட்டும் சரங்களடி ...!

உன்னால் 
வித்தகனாய் 
வேர்விட்ட 
விதைகளும் 
விழுதுகளும் 
விழிகள் சுரந்த நீரில் 
வீரியமிழந்து நின்றன 
கனவிலே கனவுகள் கரைத்து...!

தீண்டா உன்
தேன் மொழி தேடி 
திசைகள் தொலைத்த
என் 
சமாதியில் கூட
சத்தமாய் கேட்க்கும் 
உயிரின்  ஓசை 
உணர்வாய்....... 
நீயும் 
ஒட்டியிருக்கும் 
உன்னிதழ் 
மௌனத்தின் 
மனச்சாட்சிவரை  ..!

காற்றழுத்த 
வேகத்தில் 
காணாமல் போகும் 
சருகுகளாய் 
நேற்றைய 
நினைவுகளை
நீ மறந்தாலும் 
உரசிப்போகும் 
தென்றல் அறியும் 
உயிரில் மணக்கும்
உன்பெயரை ..!

தளையற்ற அன்பில்
திளைப்பதில்லை 
வாழ்வென்று 
அறியும் போது 
தேடிப்பார் 
கிளையறுந்த போதும் 
முளைத்துவரும்  துளிராய்
மீண்டும் 
மூச்சுவிடுவேன்
உன்னோடிருந்த 
ஒவ்வொரு நொடியையும் 
யாசித்தவாறே...!

பிரியமுடன் சீராளன் 

12 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

மிக மிக அருமை

சீராளன்.வீ said...

மிக்க நன்றி ரமணி சார்

தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் ,வாழ்த்துக்கும்
நன்றி நன்றி

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் சார்

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி நாராயணன் பாலா

வாழ்கவளமுடன்

Priya said...

//தளையற்ற அன்பில்
திளைப்பதில்லை
வாழ்வென்று
அறியும் போது
தேடிப்பார்
கிளையறுந்த போதும்
முளைத்துவரும் துளிராய்
மீண்டும்
மூச்சுவிடுவேன்// nice na

இளமதி said...

கொள்ளை அழகும் கொல்லும் சிரிப்பும்
வில்லைஇல்லை வாழும் வலிகளுக்கு
அள்ளக்குறையாத அன்பிருந்தால் அதுபோதும்
செல்லாக்காசுதான் சிறப்பில்லை எல்லாம்...

உள்ளம் வலிக்க உணர்வுகள்தானுறைய
சொல்லிய கவிகண்டேன் செல்வா சீராளா
அள்ளிடக் குறையா அருஞ்செல்வமோ சொல்
கல்லும் கரையும் கனமான உன்கவலைவரி...

கனக்கிறது கவிதைவரிகள் சகோ.

வாழ்க வளமுடன்!

Anonymous said...

''..சிற்றறிவின்
முற்றிய நிலைக்கு
முலாம் பூசவா
புன்னகைத்தாய்...!
நல்ல வரிகள். இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி ப்ரியா

சீராளன்.வீ said...

வணக்கம் உலக சினிமா ரசிகன்...முதலில் அவரின் ஆத்மா சாந்திவேண்டிவணங்கிக் கொள்கிறேன் ;;;;
அவரின் ஏழாம் நாளுக்கு ....நீங்கள் சொல்லும் செயலை யாரும் செய்ய போவதில்லை என்று தெரிந்துமா இப்படி சொல்கின்றீர்கள் ...ஒரு இரங்கல் சொல்வதானாலும் அதை இப்படி கருத்துக்களால்தான் சொல்ல முடியும் ..மீண்டும் இவ்வாறான வேண்டுதல்களை தொடர மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன் வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

வரவொன்று தந்து வரிகளையே ரசித்து
வாழ்த்தோடு பரிவும் ,வளமிக்க கருத்தும்
சொல்லி நீ சென்றுவிடும் சுவை எல்லாம்
சொர்க்கமே என்றாலும் உன்போல் இல்லை உறவே...!

தங்கள் வருகையும் கருத்தும் என்னை மிகமகிழ வைத்தது அன்புச் சகோதரியே இளமதி....

மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்
வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி kovaikkavi