சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Sunday 21 April 2013

என் யன்னலின் வெளியே....!
ஈரக்காற்றைத் தேடி
இதழ்விரிக்கும் ரோஜாக்கள்
மௌனமாய் தலைகவிழும்
என் யன்னலின் வெளியே....!


உதிர்வதை மறந்த பூக்களாய்
உனக்கென தேன் சிந்தும்
மலரிதழ்கள் தேடும்
உன் சுவாசங்கள்  எங்கே...!

நிலாக்கால மேகங்கள்
அடிக்கடி நலன் கேட்க்கும்
நீயின்றி வெறுமை சுமந்திருக்கும்
வாசல் படிகளை.....!

ஆகாயத்தில் கிறுக்கல்களாய்
மின்னல்போடும் அக்கினிக்கோடுகள்
அவ்வப்போது உன்னை தேடி
என்னையும் தொட்டுச்செல்லும்...!

இயற்கையின் எல்லா ஓசைகளும்
அமைதியைப் பேணும்
பசுமை சுமந்த உன் பாதங்கள்
மண்ணில் காணும் வலியறிய...!

உன் வளையோசை கேட்க்கவே
வாசலில் கோலங்கள்
எறும்புக்கும் எட்டாக்கனியாயிருக்கும்
எப்போதும் கலையாமல்...!

உனக்கென நறுமணங்கள் சேகரிக்க
நடுநிசியில் விழித்திருக்கும்
பட்டாம் பூச்சிகளுக்கும் ஏனடி
பகல்கனவுகளாய் உன்வரவு..!

நினைவினை பெருக்கும்
நிழல் யுத்தங்கள் நெஞ்சை
கசக்கிப்பிழிந்து கண்களில் வீசியும்
அழிக்கப்படாமலே ஆயிரம் கனவுகளோடு.. !

எங்கோ எரியும் துரு நட்ச்சத்திரத்தை
இமைக்காமல் பார்த்துக்கொண்டே
இன்றுவரை என் வீட்டில் ஊசலாடும்
இன்னுமொரு யனனலாய் நானும்...!

பிரியமுடன் சீராளன்

13 comments:

கவியாழி said...

நிலாக்கால மேகங்கள்
அடிக்கடி நலன் கேட்க்கும்
நீயின்றி வெறுமை சுமந்திருக்கும்
வாசல் படிகளை.....! மீண்டும் மீண்டும் பிடிக்கிறது

சீராளன்.வீ said...


மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் வாழ்கவளமுடன்

Priya said...

//எங்கோ எரியும் துரு நட்ச்சத்திரத்தை
இமைக்காமல் பார்த்துக்கொண்டே
இன்றுவரை என் வீட்டில் ஊசலாடும்
இன்னுமொரு யனனலாய் நானும்...!// அருமை...

சீராளன்.வீ said...

மிக்க நன்றி பிரியா தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும்

வாழ்கவளமுடன்

திண்டுக்கல் தனபாலன் said...

/// இயற்கையின் எல்லா ஓசைகளும்
அமைதியைப் பேணும் ///

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

சீராளன்.வீ said...

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

வாழ்கவளமுடன்

இளமதி said...

உங்கள் கவிதைப்பூக்களில் வலியின் மணத்தை நுகர்கின்றேன்..
கவிச்செடிக்கு கண்ணீரைத் தண்ணீராய் ஊற்றுகின்றீர்களோ சகோதரரே...

நினைவே நிஜங்களாக நீவிடும் பெருமூச்சு
கனவோடு தினந்தோறும் காட்டிடும் நிழல்யுத்தம்
துணையே வாராது தொலைந்திடும் நிம்மதியும்
உணர்வையும் இழந்திடாதே உய்யும்வழி நீதேடு...

வாழ்க வளமுடன்!

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சகோதரியே இளமதி

பழகிய உறவாய் பக்கம் வந்து
அழகிய கவியில் அறிவுரை சொன்னீர்

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்
வாழ்கவளமுடன்

சசிகலா said...

இப்படி அழகான வரிகளையும் கொடுத்து படித்துக்கொண்டிருக்கும் போதே எங்கே காற்றில் ஜன்னல் சாத்திக்கொள்ளுமோ என அடிக்கடி பார்க்கவும் செய்த படம் அருமைங்க.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சசிகலா தங்கள் வருகையினை இட்டு மகிழ்கிறேன்

வாழ்த்துக்கள்

இளமதி said...
This comment has been removed by the author.
இளமதி said...

என்னினிய உறவே சகோ
உன்பரிவு அங்கெனை மீட்க
அன்புசெய அகம்நாடவைக்க
இன்முக வணக்கமுடன்
மென்னுணர்வு கலந்திங்கு
தந்திடும் நன்றியுனக்கு...

மிக்க நன்றி சகோதரனே... உங்கள் அன்புக்கு எப்படி...என்ன... நான் சொல்வது...

வாழ்க வளமுடன்!

சீராளன்.வீ said...

தங்கள் வருகையே
ஆயிரம் நன்றிகள்
போலாகும் சகோதரியே

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்