ரகசியமான சில்மிசங்களுக்குள் 
 
முன்னும் பின்னுமாய் 
வேர் விட்டுக்கொண்டிருந்தன 
தேகத்தை தீயாக்கி  
தேவை தீர்த்த  உணர்வுகளை 
அரும்போடு வதம் செய்ய
பிரிவினை சுமந்தன விழிகள்...!
அர்த்தமற்ற சாமத்தில் 
அடிமுடி தேடியதால் 
அகரம் இழந்தது அன்பும் 
அறியாத வேட்க்கைகளும்...!
பகுத்தறிவு பக்குவப்படா 
பால்யவயதுக்குள் 
பகுக்கப்பட்டது மௌனம் 
பாடை சுமந்தது மரணம்...!
மிச்சம் இல்லா எச்சிலை 
அச்சம் மறந்து ருசித்த இதழ்கள் 
அவசரமாய் ஆராய்ந்தது 
அடுத்தநாள் விவாகரத்தை...!
கற்பனைக்கு எட்டாத 
கதிர்வீச்சுத் தாக்கங்களை
கடைசியாய் கடிதங்கள் பரிமாற 
மூட்டுவலி மூளைக்குள் ...!
கோட்டை கட்டி குடிபுகுந்த 
சேட்டை பண்ணா காதலுக்குள் 
ஒட்டறை படிந்து ஒவ்வாமல் போனது 
ஊடல் ஆங்கே உயர் வர்க்கம் ஆனதால்...!
ஈர்சாதி என்றுரைக்கும் 
இதயமுள்ள காதலர்க்கும் 
நீர் எழுத்தாய்  நிலைகுலையும் 
நித்திரையில் பொய்யுரைப்பின்....!
ப்ரியமுடன் சீராளன் 

4 comments:
உட்பொருளும் அதற்கு இணைந்து வந்த
வார்த்தைபிரயோகங்க்களும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார் என் வலைப்பூ வந்தமைக்கும்,கருத்துரை இட்டமைக்கும்
''..கற்பனைக்கு எட்டாத
கதிர்வீச்சுத் தாக்கங்களை
கடைசியாய் கடிதங்கள் பரிமாற
மூட்டுவலி மூளைக்குள் ...!''
இப்படியாக ஆழ்ந்த கருத்துடை வரிகள் இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ...தங்கள் கருத்துக்கும் என் வலைப்பூ வந்தமைக்கும்
Post a Comment