சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 2 ஜனவரி, 2013

இதயத்தின் இரேகைகளில்...!


விழிகள் பரப்பிய 
திசைகள் எல்லாம் 
விதைத்த நம் வேதனைகள் 
வேருக்குள் பூக்கையிலும் 
வாசம் சுமக்கும்..!

அள்ள அள்ளக்குறையாத 
அட்சய பாத்திரமாய் 
எனக்குள் உன் நினைவுகள் 
யன்னல் உரசும் 
பூங்காற்றோடு 
மின்னலாய் தொட்டுச் செல்லும் ..!

எத்தனை முறை 
சுவாசித்தாலும் 
சுவாச அறைகளுக்குள் வெறுமை 
ஆதலால் 
உள்ளங்கையில் நீ இட்ட 
உதட்டின் எச்சங்களை 
அழிக்க நினைக்கிறேன் 
இரேகைகளுக்குள் 
இதயமாய் இருப்பதனால் 
இன்னும் முடியவில்லை...!

சத்தியம் பொய்யான
சகாப்தமும் 
ஊடல் நிறைந்த உள்ளத்தில் 
ஒன்றுக் கொன்றாய்  
உதிர்ந்துவிட்ட 
உன்னதமும் 
எம்மோடு முடிந்து விடட்டும் 
சாட்சிகளையாவது 
விட்டச் செல்வோம் 
சரித்திரத்துக்காக அல்ல 
பிரிவுக்குள் காதல் என்றும் 
எரியக் கூடாது 
என்பதற்காக ...!

பிரியமுடன் சீராளன் 

4 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

அழுந்த மனதில் அமர்ந்த வரிகள்.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சசி கலா வாருங்கள் தினமும் என்னுயிரின் ஓசை கேட்க

v.m.j.gowsi சொன்னது…

காதல் பாடத்தை முதல் முதல்கற்றுகொண்டது நான் உன்னிடம்தானே .....கற்று கொண்ட உன்னாலேயேதோற்றும் போனேன் .......உந்தன் கைபிடிக்கணும் என்று எண்ணியே நேரங்கள்என்னுள் எவ்வளவு சுகமான நேரங்கள் .....தனிமையான இரவுகளில் இன்று அத்தனையும்கனவாக என்னுள்ளே . superb seer

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி கௌசி என்னுயிரின் ஓசை கேட்டமைக்கும் கவிதை சொன்னமைக்கும்