சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Saturday 9 February 2013

ஒருநாளாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் ..!அன்றுமட்டும் 
உன் 
வண்ணவிழி பேசும் 
வார்த்தைகள் குளிரவில்லை 
எண்ணமொழி பேசும் 
இதயத்திலும் ஜீவனில்லை
இருந்தும் புன்னகைத்தாய்..!


அடிமையானது   
அன்பின் தேடல்
சுமக்கமுடியா கனவுகளை 
மீண்டும்
சுமந்தவாறே...!

நீ மட்டும் 
என்றும்போல் 
சந்தோசமாய் 
அதே மழலைச் சிரிப்போடு 
மணக்கோலத்தில்
எரியும் என்னை ரசித்தபடியே ...!

எனக்கும் சொல்லிவிடு 
இதயமின்றி இருப்பது 
எப்படியென்று 
ஒருநாளாவது 
வாழ்ந்துவிட்டு போகிறேன் 
மனதோடு நானும் 
மணக்கோலத்தில்...! 

பிரியமுடன் சீராளன் 

9 comments:

Anonymous said...

''...எனக்கும் சொல்லிவிடு
இதயமின்றி இருப்பது
எப்படியென்று
ஒருநாளாவது
வாழ்ந்துவிட்டு போகிறேன்
மனதோடு நானும்
மணக்கோலத்தில்...! ''

mmm.....
Vetha. Elangathilakam.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி கோவைக்கவி அக்கா என் தேசம் வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கள்

இளமதி said...

எண்ணத்தின் குவியலோடு ஏந்திழையின்
வண்ண மணக்கோலம் வாட்டுகிறதோ தோழா
வருந்தாதே! வாழ்க்கையில் வரும்போகும்
இருந்துவிடாது என்றுமே துயர்...

இதுவும் கடந்து போகும்...

சீராளன்.வீ said...

மிக்க நன்றி இளமதி .இதுவும் கடந்து போகும்தான் இருந்தாலும் ,இறந்தாலும் நினைவுகள் மட்டும் மாறாமல் ....வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் வாழ்கவளமுடன்

சசிகலா said...

எனக்கும் சொல்லிவிடு
அடடா வலியின் மிகுதி வரிகளில் தெரிகிறது. மௌனத்தை தவிர வேறெதையும் சொல்ல முடிவதில்லை.

nayaki. said...

எனக்கும் சொல்லிவிடு
இதயமின்றி இருப்பது
எப்படியென்று
ஒருநாளாவது
வாழ்ந்துவிட்டு போகிறேன்
மனதோடு நானும்
மணக்கோலத்தில்...!

சீராளன்.வீ said...


மிக்க நன்றி சசிகலா என் வலைப்பூ வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...


மிக்க நன்றி நாயகி என் வலைப்பூ வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கள்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//எனக்கும் சொல்லிவிடு// சொல்கிறது மனதின் வேதனையை..
கவிதை நன்று சகோ.