சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 6 ஏப்ரல், 2013

உனை தேடும் உயிர்மூச்சுசிப்பிக்குள் முத்தாய் 
சிந்தனைக்குள் வந்தவளே 
முத்தத்தில் வித்திட்ட 
முதல் காதல் சொர்க்கமடி...!


உப்பு நீர் சுமக்கும் மேகம்
உதிர்ப்பதுபோல் நன்னீரை 
தப்பாய் நீ பேசினாலும்
தருகின்றாய் தாயன்பை..!

தேயா நிலவுன்னில்
தேய்ந்துவிட்ட ஞாபகங்கள்
காயா மரம்போலே 
கல்லெறிக்கு தப்பிடுமோ..!

காற்றுப் பிரித்துவிட
கனியல்ல  மரக்கிளை நீ 
ஊர்ப்பேச்சில் உதறிவிட்டாய் 
உயிரில்லை என் மூச்சில்..!

உனையற்று வாழ்கின்ற 
உயிரற்ற வாழ்க்கையது 
தெளிவற்ற வானம் போல்
தினம்தோறும் இருள் சேர்க்கும்..!

எழிலற்றுப் போனாலும் 
உனை தேடும் உயிர்மூச்சு 
தளர்வுற்றும் தினம் தேடும்
தாகமுடன் உன் வரவை ..!

வாராய் வாராய் என்றே
வருங்காலம் கரைந்தாலும் 
சேர்வாய் நீயென்று 
செழிக்கிறது மனசெல்லாம்...!


பிரியமுடன் சீராளன் 

22 கருத்துகள்:

இளமதி சொன்னது…

சகோதரா... கசியும் கண்ணீரில் கரைந்திடும் நினைவுத்தடங்கள் கண்டேன்...
கவிதையை மட்டும் ரசிக்கின்றேன்.வரிகள் வலிக்கிறது...

வாழ்க வளமுடன்!

உள்ளுணர்வே உயிர்மூச்சாய்
உண்மையான கவிசொன்னாய்
பெண்ணவளால் வலிபட்ட உன்
மென்மனம் உகுக்குதே கண்ணீர்...

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி இளமதி தங்கள் வருகைக்கும் வண்ணமான கவிதைக்கும் ...........வாழ்கவளமுடன்

Priya சொன்னது…

எழிலற்றுப் போனாலும்
உனை தேடும் உயிர்மூச்சு
தளர்வுற்றும் தினம் தேடும்
தாகமுடன் உன் வரவை ..! - arumai na

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம்பிக்கை தானே வாழ்க்கை...

வலிகள் வரிகளாக...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி ப்ரியா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாழ்கவளமுடன்

Yaathoramani.blogspot.com சொன்னது…

மனம் தொட்ட அருமையான கவிதை
பதிவுக்குள் நுழைவதே ஒரு அழகிய
பூங்காவினுள் நுழைவதைப் போலிருக்கிறது
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

மனம் தொட்ட அருமையான கவிதை
பதிவுக்குள் நுழைவதே ஒரு அழகிய
பூங்காவினுள் நுழைவதைப் போலிருக்கிறது
வாழ்த்துக்கள்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி ரமணி சார் தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நன்றி.....வாழ்கவளமுடன்

பெயரில்லா சொன்னது…

''..உனையற்று வாழ்கின்ற
உயிரற்ற வாழ்க்கையது
தெளிவற்ற வானம் போல்
தினம்தோறும் இருள் சேர்க்கும்..!'''
mmm....kaalam kaayam aattum
Vetha.Elangathilakam.

பெயரில்லா சொன்னது…

''..உனையற்று வாழ்கின்ற
உயிரற்ற வாழ்க்கையது
தெளிவற்ற வானம் போல்
தினம்தோறும் இருள் சேர்க்கும்..!'''
mmm....kaalam kaayam aattum
Vetha.Elangathilakam.

கவியாழி சொன்னது…

தெளிவற்ற வானம் போல்
தினம்தோறும் இருள் சேர்க்கும்..!
அவ்வளவு பிரியமோ?

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் .
தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே
தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்

ஆமாம் ரொம்ப பிரியம் எனக்கு

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சுப்பு தாத்தா
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி என் விபரங்களை மின்னஞ்சலில் அனுப்புகின்றேன்

இது என்தேசம் இங்கே
யாரும் வரலாம் எதுவும் பேசலாம்
நல்லவைகளை மட்டும்....

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

ஷோபனா ஷாந்தகுமார் சொன்னது…

அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சோபனா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் .வாழ்கவளமுடன்

சசிகலா சொன்னது…

ஏன் இத்தனை வலிகளை வரிகளில் வைத்தீர்கள். வலிக்கிறது.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சசி கலா ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

நினைவுகள் வலிப்பதால் வரிகளும் வலிக்கிறது
அவ்வளவுதான்

Iniya சொன்னது…


காற்றுப் பிரித்துவிட
கனியல்ல மரக்கிளை நீ
ஊர்ப்பேச்சில் உதறிவிட்டாய்
உயிரில்லை என் மூச்சில்..!

வலிகளை எல்லாம் வரிகளில் அப்படியே வரைந்திருகிறீர்கள். அருமை அருமை.

சீராளன்.வீ சொன்னது…

முதல்வருகைக்கு என் வந்தனங்கள்

அழகிய கருத்திட்டமைக்கு
மிக்க நன்றி இனியா

வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் சொன்னது…

வலி சுமந்த காதல் கவிதை வரிகளைக் கண்டு உள்ளம் குமுறுதிங்கே பிரிவின் துயர் ஆற்று இறைவா என்று மனம் உருகிக் கண்ணீரால் கழுவிச் செல்கின்றது சகோதரா .இன்பக் கவிதைகளும் இனிதே தொடர
வாழ்த்துக்கள் .