சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 30 மார்ச், 2013

வாழும்வரை தேவதையாய் ..!



தேவதையுன் நினைவுவர 
தேனூறும் கவிதைகளில்

கவிதைகளில் தேடுகின்றேன் 
கனியிதழ்கள் மௌனத்தை

மௌனத்தை சுமப்பதனால் 
மலரிதழின் வாசனைகள்


வாசனைகள் தேடும் குழல்
வாடியதோ என் மூச்சில்

என் மூச்சில் வாழுதடி 
உன்மூச்சின் முகவரிகள்

முகவரிகள் தேடவைத்தாய் 
அகவலியில் அழுகின்றேன்

அழுகின்றேன் உயிரோடு 
அக்கினிப்பூ மனசெல்லாம்

மனசெல்லாம் எழுதுகின்றேன்
உனதழகை உயிர்மொழியில்

உயிர்மொழியின் இடைவெளியில்
பயிரிட்டேன் பால்யத்தை

பால்யத்தை சுமக்கின்ற 
பாதங்கள் வைரமடி

வைரமடி நீ எனக்கு 
வாழும்வரை தேவதையாய் ..!

பிரியமுடன் சீராளன் 

10 கருத்துகள்:

Priya சொன்னது…

Anna miga arumai.. manathai etho seigirathu aluthamaana vaarthaigal... vazhthukal anna..

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி பிரியா தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

இளமதி சொன்னது…

அந்தாதி என்பது போல முடில் தொடக்கமான கவிவரிகள் அழகு. சிறப்பு. மனதைக்கவர்ந்தது.
வாழ்த்துக்கள்!

முடிவல்ல இது ஆரம்பமென
அடியெடுத்து பாடினையோ மனத்
துடிப்பினை அதிகமாக்கி
முடித்திடும் உணர்வுதனை உன்கவி...

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி இளமதி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ம்ம் இதுமுடிவல்ல என்றும் எப்போதும்

Muruganandan M.K. சொன்னது…

சுவையான கவிதை வரிகள்.
"கவிதைகளில் தேடுகின்றேன்
கனியிதழ்கள் மௌனத்தை..'

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி Muruganandan M.K.
அவர்களே தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கவியாழி சொன்னது…

என் மூச்சில் வாழுதடி
உன்மூச்சின் முகவரிகள்//
நல்ல சொல்லாடல் நன்று

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் சார் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி