சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

ஞாயிறு, 24 மார்ச், 2013

பிரியமுள்ள நண்பனுக்கு..!பிரியமுள்ள நண்பனுக்கு
காதல் உனக்கு பாடையல்ல
பருவத்தின் பயணம் 
தூரம் மறந்தால்
பாதைக்கு நீ பாரமில்லை
நேரத்தை நோவடித்தால்
நின்மதி உன்னை விலைபேசும்..!


மானை துரத்தும் முன் 
ஒட கற்றுக்கொள்
காதலிக்க தோணும் முன்
கண்ணீரை ரசித்துக்கொள் 
நீருக்கு நிழலில்லை 
நினைவுக்கு சாட்சி இல்லை 
பேருக்கு வாழ்பவன் 
ஊருக்கு சொந்தமில்லை..!

காதலும் கண்ணாடிதான் 
உடைந்தால் ஓட்டிப்பார்க்காதே 
உன்னில் கோடுகள் காட்டும்
புதிதாய் வாங்கு 
இழந்ததோடு இருப்பதையும் காட்டும்...!

ஏறப்போவது வழுக்கு மரம்
உச்சி தொடும் வரை
உறுதியாய் இரு
வழுக்கி விழுந்தால் 
மரம் இருக்கும்
உன் வாழ்க்கைதான் 
மண் கவ்வும் ..!

துக்கம் காட்டினால்
அவள் தும்மலுக்கும் 
தூக்குப்போடும் உன் கனவுகள் 
பித்துப்பிடித்து
செத்துப்போகும் முன்
பிடித்ததை எழுது 
அவள் பெயரை தவிர
முடிந்தால் முன்னேறுகிறாய் 
என்று பொருள்...!

ஒத்திகை பார்க்கும் காதல்
புத்திக்கு புரிவதில்லை
வீதியிலே விம்மி நின்றால்
விதிக்கு நீ வேடிக்கைப்பொருள் 
மந்திக்கு மழையிருட்டு 
பழகினார்ப்போல் 
மனதை மாற்றிக்கொள் 
எட்டுத்திசையிலும் 
பட்டொளி தெரியும்
நம்பிக்கையோடு நட
நாளையும் விடியும்
நாம் இல்லாத போதும்...!


பிரியமுடன் சீராளன்

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரியும் அவரவர் உணர வேண்டிய வரிகள்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_363.html) சென்று பார்க்கவும்... நன்றி...

பெயரில்லா சொன்னது…

''..மனதை மாற்றிக்கொள்
எட்டுத்திசையிலும்
பட்டொளி தெரியும்
நம்பிக்கையோடு நட
நாளையும் விடியும்
நாம் இல்லாத போதும்...!..''(பழகினாற்போல்) நல்ல புத்திமதி வரிகள்
இனிய வாழ்த்து.
Vetha.Elangathilakam.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி வேத இலங்காதிலகம் அவர்களே வாழ்த்துக்கள் ,தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும்,,,

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே தங்கள் வருகைக்கும்,தகவலுக்கும் நன்றிகள் பல....அத்தோடு என் வலைப்பூவை பின்தொடர்வதையிட்டு மிக மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்