சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Saturday 23 March 2013

என்னை செதுக்குகிறேன் ..!

நிலாக்கால கனவுகளில் 
சில ஞாபகங்கள் 
ஆன்மாவில் கலந்த மூச்சாய் 
அடிக்கடி வந்து போகும்...!


அவை காதலாய் அல்ல
அதை விட உன்னதமான 
நட்பின் சாரல் கலந்த 
உணர்வுகளின் 
நினைவுப் படிமங்களாய் 
சுவடுகள் பதித்து செல்லும்..!

அன்றுமுதல் 
ஒவ்வோர் வளர்பிறைக்கும்
நானும் இறந்துதான் பிறக்கிறேன்
இலையுதிர்கால மரத்தின்
நிர்வாண கோலம்போல் 
துளிர்விட துடித்துக்கொண்டே....!

மரணம்வரை 
மனதோடு வியாபித்திருக்கும்
சலனப் பொதிக்குள் 
உணர்வுகளும் ,உறவுகளும்
குற்றுயிராய் கூடுகட்டி வாழும் 
இருந்தும் 
இதயம் வெறுமைகளைத் தேடியே
நாட்களைக் கடத்தும்....!

வாழ்க்கை சுமை 
வரமா,சாபமா
பிரித்தறிய துடிக்கும்
ஒவ்வோர் உயிருக்கும்
சாமரம் வீசி 
சாந்தம் கொடுப்பது
நட்பும்,காதலும்
அவை கூட
சந்தர்ப்பத்தில் தலையறுக்கும்
மாறாக் கோட்பாடுகளை 
விதைக்கின்றன 
விரும்பியோ விரும்பாமலோ....!

ஆதலால் நானும் 
மாறிக்கொள்கிறேன் 
ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும்
புளியம்பழத்தின் புதுமை போல் 
வலியையும்,வாழ்வையும்
சேரவிடாமல் 
மகிழ்வை மட்டும் 
சிந்தையில் செதுக்கும் 
சிற்பியாய் உருமாற்றம் கொண்டு....!


பிரியமுடன் சீராளன் 

6 comments:

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

என்னைச் செதுக்குகிறேன்! எல்லா அடிகளும்
உன்னை உயா்த்தும் ஒளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

இளமதி said...

அன்புச் சீராளனே!

உன்னை உணர்ந்தனை
உயர்வுமிகக் கொண்டனை
பின்னும் மனவுணர்களை
பிழையெனச் சொல்லவில்லை
இன்னல் வந்ததென்று
இடிந்துபோய் இருந்துவிட்டால்
கன்னல்வாழ்வும் வீணே
கருகித்தான் போகுமன்றோ
ஆகையினால்

நன்று நம்தோழா
நல்லமுடிவெடுத்தாய்
இன்று உன்வாழ்க்கை
என்றே நினைத்திடுடென்பேன்
வென்றிடலாம் எதனையும்
விரைந்திடு வீறுநடைபோட்டிடு...

நல்ல கவிவரிகள் படைத்தீர்கள். வாழ்த்துக்கள்!

உங்கள் உதவியை வரவேற்கின்றேன்.
எப்படி வலைப்பூத்தளத்தில் செய்வது. எனக்கு அதிக தொழில் நுட்பங்கள் தெரியாதே...

வாழ்க வளமுடன்!

சீராளன்.வீ said...

வணக்கம் கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

கவிதையை ரசிப்பாய்
கருத்தும் மிக இடுவாய்
நாணும் வாழ்வுக்கு
நம்பிக்கை கரம் கொடுப்பாய்
சேரும் பாதை சொல்லி
சிந்திக்க வைத்திடுவாய்
பாருக்குள் தேடினாலும்
பாவையுன்போல் தோழி இல்லை...!

மிக்க நன்றி இளமதி தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் ....!

நீங்கள் எதை கேட்க்குறீங்க புரியல்ல
அது என்னவென்று என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்க
seeralan2012@gmail.com

Anonymous said...

''...மாறிக்கொள்கிறேன்
ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும்
புளியம்பழத்தின் புதுமை போல்
வலியையும்,வாழ்வையும்
சேரவிடாமல்
மகிழ்வை மட்டும்
சிந்தையில் செதுக்கும்
சிற்பியாய் உருமாற்றம் கொண்டு....!..''
good Seeralan. Eniya vaalththu.

Vetha.Elangathilakam.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்
தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்


வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்