சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 9 மே, 2013

உயிர்த்துளிகள் ..!
உயிர்த்துளி

உன் கடைசித் துளி 
கண்ணீரோடு 
எரிக்கப்பட்டதால் 
என் சாம்பல்கள் எல்லாம்
சந்தணவாசம்......!

புதையல்

எனக்கான 
வாழ்க்கைத் 
தரிப்பிடங்களில் 
இன்னும் இறக்கப்படாத
கனவுப் பொதிகளில் 
மீண்டும் மீண்டும்
நிரப்பப் படுகின்றன 
உன் மௌனப் புதையல்கள்...!

பரிவு

விம்மிக்கொண்டிருக்கும் 
என் விழிகள் 
எழுதிக்கொண்டிருக்கின்றன
தும்மிக்கொண்டிருக்கும்
உன் 
தூங்காத இரவுகளின் 
துயரத்தினை ..!

முத்தம்

மூன்றாம் பருவத்தில்
முத்தான மழலையோடு
தித்திக்கும் உன் வாழ்வில்
இன்னமும் 
ஒழிந்தே கிடக்கின்றன 
வெளிக்காட்டி 
வேதனை கொடுக்காத
ஆயிரமாயிரம் 
அழியாத முத்தங்கள்...!

தோல்வி

உன் வாழ்க்கைப் 
போராட்டத்தில்
முதலில் 
தோற்றுப் போனது 
தவிர்க்கமுடியாமல் 
நினைக்க மறந்த 
நம் காதலின் 
கடைசி நாட்கள் ...!

நினைவு

எழுதிக்கொள்ள 
முடியாத பக்கங்களில்
எவனோ கிறுக்கிய
அழியாத ரேகைகளாய் 
எனக்குள்ளும் 
உன்நினைவுகள்
அழிக்கமுடியாமலும்,
அறுக்கமுடியாமலும் 
என்னை அரித்துக்கொண்டே...!

பிரியமுடன் சீராளன் 

16 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தோல்வி மிகவும் பிடித்தது...

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வாழ்கவளமுடன்

* யாஸ்மின் * சொன்னது…

Superb ... enaku pudhayal and tholvi romba pidichuruku brother :)

தனிமரம் சொன்னது…

நினைவுகள் கவிதை நெஞ்சை கொள்ளை கொள்கின்றது சகோ!

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி யாஸ்மின் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி தனிமரம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்

வாழ்க வளமுடன்

Priya சொன்னது…

அனைத்தும் அருமை அண்ணா... :)

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி பிரியா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வாழ்கவளமுடன்

ஹிஷாலி சொன்னது…

சிறு துளியில் பெருவெள்ளமாய் இனித்தது உங்கள் கவிதைகள்

சீராளன்.வீ சொன்னது…

வாருங்கள் தங்கள் முதல்வருகைக்கு வணக்கம்

இனிய கருத்து சொன்னமைக்கு நன்றிகள் வாழ்கவளமுடன்

vimalanperali சொன்னது…

நல்ல கவிதகள் வாழ்த்துக்கள்.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி விமலன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

வாழ்கவளமுடன்

Unknown சொன்னது…

வலைச்சரத்தில் உங்கள் தளத்தை அறிமுகம் செய்திருந்தார்கள். மீண்டும் மீண்டும் நுகரத்தூண்டும் சந்தன வாசத்தோடு நிற்கின்றன உயிர்த்துளியின் வரிகள். வாழ்த்துக்கள்.

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் Niroshan
தங்கள் முதல் வருகையும் அழகிய கருத்துக்களும் கண்டு மிக
மகிழ்கின்றேன்
வலைச்சரத்தில் என் அறிமுகமா...?
தகவலுக்கும் .மிக்க நன்றி

நன்றி நன்றி
வாழ்கவளமுடன்...!

Unknown சொன்னது…

கவிதைகள் மிக்க அருமை ..

மீண்டும் தோடர்டும் ..............

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி கவிதா

தொடர்கிறேன்

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்