சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 2 செப்டம்பர், 2013

உயிர் நழுவும் ஓசை...!சிற்றிதழின்  சில்மிசங்கள்

முத்தத்தை நேசிக்க
பற்றிவிடும் கரங்களுக்குள்
ஒற்றைவரி கடிதம்
மூச்சில்  எழுதி
மூடியது நம் நினைவால் !


வற்றிவிடும் விழிநீரில்

வழிதவறும்  சுவாசத்தை
நெற்றியிலே வைத்த பொட்டு
நினைவுக்குள்  செருகிவிட
அற்பமாய் சிரித்தது
ஆண்பாவம் வெட்கித்து...!

உள்ளிருக்கும் ஆன்மாவில் 

ஓட்டைவிழுந்து விட
அடித்தது சந்தர்ப்பம்
அமைதியாய் நீ வெளியேற
எட்டிப் பிடிக்க
இதயத்தில் கைகள் இல்லை
சட்டென 
எங்கிருந்தோ இரைந்தது 
உயிர் நழுவும் ஓசை...!

ஒருமைகள் சேர்ந்த

ஈரெழுத்து இலக்கணத்தில் 
இதழ்கள் ஓட்ட 
இணைந்த நம் வார்த்தையிலே 
' நா' விட்டு நழுவி
நகர்ந்துவிட்டாய் ' ம்' எடுத்து 
இறந்தது இன்னொரு நான் 
எவருக்கும் தெரியாமல்...!

குறையற்ற வார்த்தை

இறையென்று இயம்பிவிட்டு
கோபுரம் நீ மறைந்துவிட 
அணையாத தீபங்களோடு 
அமைதியாய் சரிந்தது 
இன்னோர் ஆலய விருட்சம்
ஆரவாரம் ஏதும் இன்றி...!

கண்ணுக்குள் நீந்தும்

காதல் நினைவெல்லாம் 
உள்ளுக்குள் ஏங்கும்
உயிரை அழித்துவிட 
மண்ணுக்குள் மீந்தும்
மாறவில்லை 
மார்போடிணைந்த மயக்கநிலை ..!

பிரியமுடன் சீராளன் 

20 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மயங்கி விட்டேன்...

வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான காதல் கவிதை ! வாழ்த்துக்கள் சகோ .

Priya சொன்னது…

ஒருமைகள் சேர்ந்த
ஈரெழுத்து இலக்கணத்தில்
இதழ்கள் ஓட்ட
இணைந்த நம் வார்த்தையிலே
' நா' விட்டு நழுவி
நகர்ந்துவிட்டாய் ' ம்' எடுத்து
இறந்தது இன்னொரு நான்
எவருக்கும் தெரியாமல்...! /// இந்த வரிகள் மிகவும் அருமை அண்ணா...

தனிமரம் சொன்னது…

அருமையான காதல் கவிதை

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி தனபாலன் சார்
தவறாமல் எல்லோர் பதிவுக்கும் வந்து கருத்து சொல்லும் தங்கள் நட்புக்கு
பலநூறு நன்றிகள்

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சகோ அம்பாள் அடியாள்
தங்கள் ரசனைக்கும் ,கருத்துக்கும்

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

சரியான வரிகளை எடுத்து சொல்லி இருக்கீங்க தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ப்ரியா

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி தனிமரம்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வாழ்கவளமுடன்

இளமதி சொன்னது…

உன்னதமான காதற் பிரிவு ஏக்கக் கவிதை!
உள்ளத்து வலிகளைகளை
உருக்கி வார்த்ததனால்
உணர்வுகளும் உறையுதே
உம் வரிகளால்...

அருமையான கவிதை! அதை எழுதிய உமது ஆற்றலை ரசிக்கின்றேன் சகோ...

வாழ்க வளமுடன்!

Iniya சொன்னது…

கண்ணுக்குள் நீந்தும்
காதல் நினைவெல்லாம்
உள்ளுக்குள் ஏங்கும்
உயிரை அழித்துவிட
மண்ணுக்குள் மீந்தும்
மாறவில்லை
மார்போடிணைந்த மயக்கநிலை ..!

உயிரால் எழுதிய உண்மைக் காதலை உணர்த்தும் வரிகள் அருமை

அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) சொன்னது…

அடடா.. ஒரு அழகிய காதல் கவிதை... டக்கெனப் படித்தேன்ன்.. புரிந்தது மாதிரி இருந்தது.. ஆனா புரியவில்லை:))

அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) சொன்னது…

சரி புரியாமல் பதிலெழுதிட்டு ஓடுவதில்லை நான், அல்லது புரியவில்லை என்றே போட்டு விடுவேன்ன்..
சரி மீண்டும் படிப்போமே என 2ம் தடவை படித்தேன்ன்.. இப்போ கிட்டத் தட்ட புரிந்துவிட்டது...

அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) சொன்னது…

இருப்பினும் இன்னொரு முறை படித்து கன்ஃபோம் பண்ணியபின் பதிலிடலாம் என 3ம் தடவை படித்தேன்ன்.. புரிஞ்சுபோச்சு.. காதல் தோல்விக் கவிதை என..:)..

நன்றாக இருக்கு கவிதை. தமிழ்மண வோட் செய்யும் வசதி இன்னும் ஏற்படுத்தவில்லையோ?.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

குறையற்ற வார்த்தை
இறையென்று இயம்பிவிட்டு
கோபுரம் நீ மறைந்துவிட
அணையாத தீபங்களோடு
அமைதியாய் சரிந்தது
இன்னோர் ஆலய விருட்சம்
ஆரவாரம் ஏதும் இன்றி...!

ஆழமான உணர்வுகளை
அருமையாக பகிர்ந்தவை.. பாராட்டுக்கள்..!

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகோ இளமதி..!

உணர்வுகள் இன்னும் காயவில்லை அதனால் கிறுக்கல்கள் தொடர்கின்றன

தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்கின்றேன்
மிக்க நன்றி வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் இனியா...!

உயிரில் உள்ளதை உயிரால்தானே எழுதணும் மிக்க நன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் அதிரா...!

தாங்கள் போகும் இடத்தில் கலகலப்புக்கு என்றும் குறைவில்லை காதல்தோல்வி கவிதை என்பதை உறுத்திப்படுத்திவிட்டு கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி
கவிதைக்கு மேல் படம் படத்திற்கு மேல் உள்ளதே தமிழ்மணம் வாக்கு போடும் வசதி மூன்றுமுறை வாசித்தீர்கள் அதை காணவில்லையே...மியாவ்

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் இராஜேஸ்வரி ..!
தங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள்

தங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி மனதார பாராட்டியமைக்கு நன்றிகள் நன்றிகள்

வாழ்கவளமுடன்

அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) சொன்னது…

//கவிதைக்கு மேல் படம் படத்திற்கு மேல் உள்ளதே தமிழ்மணம் வாக்கு போடும் வசதி மூன்றுமுறை வாசித்தீர்கள் அதை காணவில்லையே...மியாவ்

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 3 முறை பதிவு படித்தேன்ன்.. ஆனா மேலே கீழே ஓடி ஓடி, வாக்குப் போடும் வசதி உள்ளதா எனப் பார்த்தேன், வெறும் “தமிழ் மணம்” என ஒரு பொக்ஸிலும், submit to tamilmanam என இன்னொன்றிலும் இருக்கு... கை இல்லையே .. இப்பவும் அப்படியேதான் இருக்கு... எங்கே வோட் பண்ணுவது?... ஆராவது வோட் பண்ணியிருக்கினமோ?.. செக் பண்ணுங்கோ.. அல்லது எனக்கு மட்டும் இன்விஷிபிளோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

சீராளன்.வீ சொன்னது…

மன்னிக்கணும் அதிரா எனக்கு காட்டுது ஆனால் மற்றவங்களுக்கு எப்படி காட்டுதோ என்று தெரியல்ல ஆதலால் ஏனைய நண்பர்களிடமும் கேட்டு விட்டு அதற்கான நடவடிக்கையை செய்கின்றேன் ...நான் சொன்ன முறை தவறுதான் மீண்டும் மன்னியுங்கோ....எதுக்கு இந்த கொலைவெறி கோபம்....!

தகவலுக்கு மிக்க நன்றி அதிரா
வாழ்கவளமுடன்