சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 29 August 2013

தேவதையின் கீர்த்தனைகள்..!



கரும்புக்கு இனிப்பூட்ட
உன் காத்திருப்பு போதும்

தெருப்புல்லும் இசைக்கும்
உன் தெள்ளுதமிழ் ராகம்

ஒரு யுகத்தின் உன்னதத்தை
உன் ஓரசைவே  பேசும்

உணர்வில்லா  தென்றலுக்கும்
உன்மூச்சு உயிர்கொடுக்கும்

பருவத்தின் ஏக்கங்கள்
உன் பார்வைகளால்  தேனூறும்

பலகோடி தாரகைகள்
உன் பாசத்தில் ஒளிகொள்ளும்

பூப்பூக்கும் செடிகளுக்கும்
உன் புன்னகைகள் வாசமிடும்

தாயன்பு அற்றோர்க்கு
உன் தங்கமொழி பாலூட்டும்

களையிழந்த வாழ்வுக்கு
உன் கண்ணியங்கள் தீபமிடும்

கானகத்தில் வாழ்ந்தாலும்
உன் கனவுகளே சொர்க்கம் தரும்

இனிமையற்று பேசிடினும்
உன் இதழிரண்டும் இலக்கணங்கள்

ஏழையின் சிரிப்புக்கு
உன் எளிமைகள் தேற்றங்கள்

கிள்ளை மொழி அறியார்க்கு
உன் கீர்த்தனைகள் அகநெறிகள்

நிலையற்ற பூமியிலே
உன் நினைவுகளே நித்தியங்கள்

கற்றுணரா மனிதர்க்கு
உன் கார்குழல்கள் காப்பியங்கள்

செத்திட நினைப்போர்க்கு
உன் சிரித்தவிழி சஞ்சீவி

சத்தியத்தின் சமநிலைக்கு
உன் முத்துப்பல் முகவரிகள்

மொத்தத்தில் நீ என்றும்
முழுமதிதான் தேவதையே...!

பிரியமுடன் சீராளன் 

24 comments:

Seeni said...

arumai..

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சீனி சார்

இளமதி said...

தெவிட்டாத ராகமுடன்
தெள்ளுத்தமிழ் பாடல்

அடுக்காகப் பாடிய உன்
ஆர்வமுள்ள நாடல்

தடுத்தாலும் நிற்காதே
தாயன்பின் தேடல்

எடுத்தாள்வார் இல்லாத
எண்ணங்களின் கூடல்!

அமைதியாக இசைத்திடத் தோன்றும் கானம்!

மிகமிக அருமை சீராளன்!

வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் said...

மிகவும் ரசித்தேன் சகோதரா !! வாழ்த்துக்கள் தேவதையின் கனவுலகம் சிறந்த கவிதைப் படைப்பிற்கு மேலும் துணை நிற்கட்டும் .

Anonymous said...

தேவதையின் வருணனை மிக நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சீராளன்.வீ said...

அழகாய் கவி சொல்லி
அன்பாய்க் கருத்திட்டமைக்கு
மிக்க நன்றி சகோ இளமதி

வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

நன்றாய் ரசித்து நயமாய் வாழ்த்தி கருத்திட்டமைக்கு

மிக்க நன்றி சகோ அம்பாள் அடியாள்

வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்

மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்

வாழ்த்துக்கள்

முற்றும் அறிந்த அதிரா said...

முதன் முதலா வருகிறேன்ன் வழி விடுங்கோ..

ஒரு படத்துக்கு இத்தனை வர்ணனைகளோ?.. கற்பனை வளம் சூப்பராக இருக்கு. படத்துக்கேற்ற பொருத்தமான கவி வடிச்சிருக்கிறீங்க.. அருமை.

சசிகலா said...

தேவதையின் கீர்த்தனைகள் தேனாய் இனிக்கிறது. வாழ்த்துக்கள்.

சீராளன்.வீ said...

வாங்கோ வாங்கோ அதிரா வழியும் விட்டாச்சு ஆராத்தியும் எடுத்தாச்சு
தங்கள் முதல்வருகையை உளமார வரவேற்கின்றேன்

ஒரு படத்தக்கு இத்தனை வர்ணனைகள் இல்ல படம்போல் உள்ள ஒருத்திக்கு இந்த வர்ணனைகள் போதாது

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சசி கலா

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

Priya said...

உங்கள் மொழி ஆளுமையைக் கண்டு வியக்கிறேன் அண்ணா... அருமை...

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ப்ரியா

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

Iniya said...

காதல் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவ்வளவு அழகாக செதுக்கி இருக்கிறீர்கள். உண்மையில்
கருத்து சொல்ல எனக்கு அனுபவமும் அறிவும் போதாது என்றே எண்ணத் தோன்றுகிறது. இது எந்த நதி இப்படி பிரவாகிக்கிறதே,ரொம்ப சந்தோசம்ஆக இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

பூப்பூக்கும் செடிகளுக்கும்
உன் புன்னகைகள் வாசமிடும்

தாயன்பு அற்றோர்க்கு
உன் தங்கமொழி பாலூட்டும்

முழுமதியாய் சிரிக்கும் வரிகள் அருமை..பாராட்டுக்கள்..!

Unknown said...

"பூப்பூக்கும் செடிகளுக்கும்
உன் புன்னகைகள் வாசமிடும்

தாயன்பு அற்றோர்க்கு
உன் தங்கமொழி பாலூட்டும்"
ஒவ்வொரு வரியும் ரசிக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள்

இளமதி said...

வலைச்சர அறிமுகத்தில் இன்று உங்களை அறிமுகம் செய்துள்ளார் சகோதரி தென்றல் சசிகலா...

வாழ்த்துக்கள் சகோ!

மகிழ்நிறை said...

கரும்புக்கு இனிப்பூட்ட
உன் காத்திருப்பு போதும்
முதல் வரியே சுண்டி இழுக்கிறது.உணர்ந்து பாடும் போது
அத வரிகளில் தான் எவ்வளவு ஆன்மா
அவள் கொடுத்து வைத்தவள் !

சீராளன் said...

வாருங்கள் இனியா காதல் சக்திவாய்ந்ததுதான் என்பதை தாங்களும் அறிவீர்களே

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்கவளமுடன்

சீராளன் said...

வாருங்கள் இனியா காதல் சக்திவாய்ந்ததுதான் என்பதை தாங்களும் அறிவீர்களே

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்கவளமுடன்

சீராளன் said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி அம்மா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
பாராட்டுக்கும் மிக்க நன்றி

வாழ்கவளமுடன்

சீராளன் said...

வணக்கம் Viya Pathy
ஏதோ எழுதுகிறேன் எனக்குள் இருப்பதை அவ்வளவே

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி

வாழ்கவளமுடன்

சீராளன் said...

வணக்கம் Mythily kasthuri rengan
தங்கள் முதல் வருகைக்கு வாழ்த்துக்கள்
ஆன்மாவினால் எழுதுவதால் அப்படி இருக்கிறதோ தெரியவில்லை
வாழ்வின் வலிகள் இங்கே வரிகளாக ....ஆம் அவள் கொடுத்துவைத்தவள் என்னை எழுதவைத்து நினைக்கவைத்ததால்

மிக்க நன்றிகள்
வாழ்கவளமுடன்