சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday 30 December 2014

புலர்ந்திடு புத்தாண்டே !வந்திடும் ஆண்டின் தொடக்கம்
      வலியெலாம் மறைய  மீண்டும்
தந்துநல் ஆட்சி முறைமை
      தரணியும் மகிழ வேண்டும்
எந்தையும் தாயும் வாழ்ந்த
      எழில்மிகு ஈழத் தீவில்
சிந்தனை செல்வம் அமைதி
     சிறப்புற சேர வேண்டும் !ஓண்டமிழ் உரைக்கத்  தமிழர்
     உயர்நெறி வளர்க்க  மக்கள்
காண்டிப கணையைப் போல
     காலத்தின் வலிமை கொண்டே
தீண்டிய  கயவர் மூச்சை
     தீயிலே எரித்த  தலைவன்
ஆண்டநற் காலம் மீண்டும்
     அனுதினம் காண வேண்டும்..!

ஈன்றதாய்  இல்லா பிள்ளை
    இருப்பிடம் அற்ற  மக்கள்
தேன்சுவை போலப் பேசும்
     திருவளர் செல்வச் சிறார்கள்
கோன்முறை இல்லா அரசால்
     குற்றுயிர் அடைந்த காலம்
மான்மழு தரித்த சிவனால்
    மறைந்திடல் வேண்டும் மண்ணில் !

அன்பினை தந்த பாலன்
      அகிம்சையை  ஈன்ற புத்தன்
சின்மதி அறுத்த பெரியார்
       சிறையினை வென்ற காந்தி
தன்னலம் கருதா சேவை
      தரணியில் புரிந்து சென்றார்
பொன்னுயிர் கொண்ட  மக்காள்
      புரிந்திடில் வாழ்வும் இனிதே  !

இனிவரும் எல்லா யுகமும்
     இறையருள் கூட வைப்பாய்
தனிப்பெரும் தயாள குணத்தால்
     தரணியை மாற்ற  வைப்பாய்
கனிச்சுவை உண்ட களிப்பாய்
     கண்ணியம் காக்க வைப்பாய்
புனிதமாய்  இவற்றைப் பேணப்
     புத்தாண்டே புலர்வாய் நாளை !

அன்பு நண்பர்கள் .நண்பிகள். உறவுகள் அனைவருக்கும்  இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


பிரியமுடன் சீராளன் 

19 comments:

அம்பாளடியாள் said...

வணக்கம் !
அருமையான எண் சீர் விருத்தம் !மனம் போல் மகிழ்வும் தங்க இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா .

Ranjani Narayanan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ அம்பாள் அடியாள்
முதல்வருகைக்கு நன்றியும் வணக்கங்களும்

தங்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ரஞ்சனி அம்மா தங்களின்
முதல்வருகைக்கு நன்றியும் வணக்கங்களும்

தங்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

Iniya said...

இனியவிருத்தம் கேட்டேன் முகம்மலர வாழவும் மலரும் நின் வாழ்த்தின் வலிமைகண்டு. நின்கனவு பலிக்கட்டும் புதிய ஆண்டில் எண்ணங்கள் யாவும் ஈடேறட்டும். வாழ்க வளமுடன் ....!
அருமை அருமை ...!

Iniya said...

sorry வாழ்வும் மலரும் என வாசிக்கவும்

ஊமைக்கனவுகள் said...

தங்களின் கனவுகள் நிறைவேறவும், எண்ணம் போல் வாழ்க்கை அமையவும் வாழ்த்துகிறேன் அய்யா!
நன்றி
( எண் சரிபார்த்தலை நீக்கிவிடவும் அய்யா. பின்னூட்டம் இட மிகச் சிரமமாக உள்ளது )

சசிகலா said...

வேண்டுவது எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள் .
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

அமைதியும் ஆனந்தமும் பொழியட்டும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கா.மாலதி. said...

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்,
வேண்டாததுவிலகி
வேண்டியது கிடைத்து
வற்றியோடு வாழ்ந்திடுக.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Yarlpavanan said...

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

இளமதி said...

வணக்கம் சகோ!

புத்தாண்டு உன்றனுக்குப் போடும் புகழ்மாலை!
சொத்தாகும் செந்தமிழும் சூழ்ந்து!

அருமையான விருத்தம் சீராளன்!

எண்ணங்கள் யாவும் ஈடேற இதயங் கனிந்த
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

த ம.3

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

புத்தாண்டை வரவேற்கும் விருத்தம் அருமை

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வரிகள்! தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!

Iniya said...

த ம + 4

yathavan64@gmail.com said...

அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com