சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 27 ஜூலை, 2019

அமிழ்தானவள் !சித்தம் நுழைந்திடும் சோர்வைச் - சிறு 
சேலைத் தலைப்பினால் கழைவாள் 
நித்தம் உறங்கிடும் போதில்  - தலை 
நீவித் துயில்தர விளைவாள் !

வெல்லக் குவளையாய் இதழ்கள்  - இரு 
விழிகளும் அமிழ்தக்  குறள்கள் 
செல்லக் குழந்தையாய்ச்  சிரிப்பு  - இதம் 
சேர்க்கும் செந்தமிழ்   விரிப்பு    !

முல்லை மணந்தரும் பேச்சில் - நறு 
முகையென மலர்வாள்  மூச்சில் 
இல்லை எனும்சொல் அறியாள் - தினம் 
இறைமனம் காட்டும்  நெறியாள் !

எது..கை கொடுத்தும்  இசைப்பாள் - கவி 
எதுகை விடுத்தும்  இனிப்பாள் 
மதுகை இருந்தும் மறைப்பாள்  - மலர்   
மது..கை கொடுத்தும் முறைப்பாள்  !

புத்தகம் அவளது தங்கை - எனைப்  
பொலிய வைத்திடும் மங்கை 
வித்தகம் புரியும் விரலாள்  - இசை 
வியக்கும் மதுரக் குரலாள் !

பச்சைப் பார்வைகள் தந்தாள் - என் 
பருவத் தீபுக வந்தாள் 
இச்சைப் போர்வைகள் களைந்தாள் - மனம் 
இருக்கும் இடத்தில் நுழைந்தாள் !

வண்ணக் கனவுகள் இன்னும் - உயிர் 
வளர்த்துக் கவியாய்  மின்னும்   
எண்ணச் சிறகுகள்  அல்லும் - வலி  
இருந்தும் பறந்ததைச்  சொல்லும் !

5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் பாவலரே
அழகிய கவிதை மிகவும் இரசித்தேன்.
தொடர்ந்து எழுதுங்கள்...

Unknown சொன்னது…

அருமை அண்ணா....

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
ரசித்தேன்

அதிரா From அந்தாட்டிக்கா:) சொன்னது…

மேஜரே நலமோ? இக்கவிதை வெளியாகும்போது நான் நாட்டில் இல்லை.. இப்போதான் பழையதை எல்லாம் கிண்டிப் பார்க்கையில் கிடைச்சது.. வழமைபோல காதல் கவிதை எனில் சுனாமியா வருது உங்களுக்கு.. அழகிய கவிதை சீராளன்.

Tamil சொன்னது…

Nice article, good information and write about more articles about it.
Keep it up
success tips in tamil