சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 17 நவம்பர், 2022

புரிந்தும் புரியாமலும் ....!தேனடை போலிளம்  பேச்சுக ளும்!-அதில் 

தேங்கிம கிழ்ந்திடும் மூச்சுக ளும்! 

கானலாய்ப் போயின காட்சிக ளாய்!-அதன் 

கற்பனை வாழுது  நீட்சிக ளாய்!   


மூச்சற வைத்தவுன் மோனங்க ளும்!-அதில் 

மூழ்கிய ழிந்திட்ட  கானங்க ளும்!   

பேச்சறு பட்டவன் பாசைக ளாய்! -மீதம் 

பேசிய டங்கிடும் ஓசைக ளாய்! 


கோபக்க ணைவீசத் தேவையில் லை! - மீண்டும் 

குற்றுயி ராகிட ஆசையில்லை !

ஞாபக மொன்றுயிர் வாழட்டுமே !- உன் 

நட்புக  ளாலிதம்  சூழட்டுமே! 

 

சென்றுவா! தென்றலே நேரமில்லை- உன் 

சீண்டலி னித்தொட ஏதுமில்லை!   

வென்றுவா! வாழ்வென வாழ்த்துகி றேன்-உன் 

வேதமொ ழிக்குயிர் போர்த்துகி றேன்! 


4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை பாவலரே
எழுத்தின் நிறம் விழிகளுக்கு இடையூறாக உள்ளது.

அடுத்த முறை வேறு நிறம் தேர்வு செய்யவும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ஜி !KILLERGEE Devakottai

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்,


//எழுத்தின் நிறம் விழிகளுக்கு இடையூறாக உள்ளது.

அடுத்த முறை வேறு நிறம் தேர்வு செய்யவும் நன்றி.//

கண்டிப்பாக கவனத்தில் எடுக்கிறேன் தற்போது மாற்றிவிட்டேன்
நன்றி

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கரந்தை மைந்தரே !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்