சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 26 ஜனவரி, 2013

கனவுகள் சுகமே...!


சிறகும் முளைக்கா 
சிட்டுக்குருவி 
திசைகள் தேடி 
நிலத்தில் பறக்கும் 
உறவை விட்டு 
உள்ளம் பிரிக்க 
பிறவிக்காதல்  
பெரும்பங்காற்றும் 

நிழலை தந்து 
நீரை மறைத்து 
ஓடும் மேகமாய் 
உற்றவள் முறைப்பு 
மனமடி  தவழும் 
வெப்பம் போக்க 
மழையை கொட்டும் 
வஞ்சியுன் பார்வை 

தவறினை தந்தவர்  
மறைவினில் வாழ 
சிறைகளில் தென்றல் 
சிந்தனை மாற்றும் 
கிளைகளை வெட்டி 
பூக்களை சேர்த்து 
மரங்களில் மாலை 
நம் காதலின்  மூளை.

விலையில் வெம்பும் 
வாழ்த்து மடல்கள் 
விரல்கள் தடவி 
விழிகள் பதித்து 
அன்பினை எழுதி 
அணைத்துமே  நெஞ்சில் 
காதலர் கரங்களில் 
சேர்ந்திட  புளுங்கும் 

விழிகள் மூடி 
இதயம் திறந்து 
மனிதனை தூய்மை  
மனிதன் ஆக்கி 
மானுடம் பேணும் 
மாயை வாழ்வின் 
தூக்கத்தில் என்றும் 
கனவுகள் சுகமே...!

பிரியமுடன் சீராளன் 

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

''..மனமடி தவழும்
வெப்பம் போக்க
மழையை கொட்டும்
வஞ்சியுன் பார்வை..''
சக்தி மிக்கது காதல் பார்வை.
நல்ல வரிகள் நிறைந்த வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சகோ என் வலைப்பூ வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் வாழ்கவளமுடன்

இளமதி சொன்னது…

அன்புச் சகோதரா...

நனவினில் வாழ்வு ரசிக்காவிடினும்
கனவினில் தெரியுது சுகம் என்றீர்
நலமாக சிந்தித்து நயமாகக் கவி படைத்தீர்
உளமார வாழ்த்துகிறேன் உம் திறமை இங்குகண்டே ...

அழகாக இருக்கிறது உங்கள் வலைப்பூ. அருமையாக படைக்கின்றீர் கவிதைகளை.
வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சகோ, என்னுயிரின் ஓசை கேட்டமைக்கும் ,வாழ்த்தோடு கருத்திட்டு என்னை மகிழ்ச்சியுற வைத்தமைக்கும் நன்றிகள் பல .....வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்