சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

உன் மௌனங்களின் மொழிபெயர்ப்பை தேடியே....!


திறந்த 
மனப்புத்தகத்தில் 
தீர்க்கப்படாத 
கேள்விகள் உன் 
மௌனங்களின் 
மொழிபெயர்ப்பை 
தேடியே....!

அக்கம் பக்கம் 
பார்க்காமல் 
அரளிவிதை நடுகிறாய் 
நாளை 
உன் கருவுக்கும் அது 
நன்றிக்கடன் செலுத்தலாம்....!

தூரத்து 
மூங்கில் காட்டில் 
எரியும் நெருப்பு 
உன் வீடுவரை 
வரவில்லைத்தான் 
இருந்தும் 
உனக்கான புல்லாங்குழலும் 
சேர்ந்துதான் எரிகிறது...!

இரவில் 
எல்லாக்கதவுகளையும் 
இறுக்கமாய் மூடிக்கொள்கிறாய் 
இதயத்தின் கதவுகள் 
திறந்துதான் இருக்கிறது 
உள்ளுக்குள் 
இருட்டை விட இருட்டாய் 
நம்பிக்கை....!

நெருக்கமான உன் 
நெஞ்சிற்குள் 
சிறு வெடிப்புகள் 
மௌனம் படிந்த 
மனக்கோடுகளில் 
அச்சம் முளைக்கிறது 
னிபடாமல் வளரும் 
அடர்ந்தகாட்டு 
முள்ளுச்செடிகளாய் ...!

நானும் 
வெறிச்சோடிப்போன 
வானத்தை 
வெறித்துப்பார்க்கிறேன் 
வெண்ணிலவும் இல்லை 
வெள்ளிகளும் இல்லை 
வழமைபோல் 
மேகங்கள் இன்றி 
மழைபொளிகிறது 
காரணம் இன்றி பிரிந்த 
உன் காதலைப்போல
அமைதியாய் ...!

பிரியமுடன் சீராளன்

11 கருத்துகள்:

சதீஸ் சொன்னது…

தூரத்து
மூங்கில் காட்டில்
எரியும் நெருப்பு
உன் வீடுவரை
வரவில்லைத்தான்
இருந்தும்
உனக்கான புல்லாங்குழலும்
சேர்ந்துதான் எரிகிறது...!

மிகவு அழகான வரிகள் அண்ணா

பெயரில்லா சொன்னது…

''..நெருக்கமான உன்
நெஞ்சிற்குள்
சிறு வெடிப்புகள்
மௌனம் படிந்த
மனக்கோடுகளில்
அச்சம் முளைக்கிறது
பனிபடாமல் வளரும்
அடர்ந்தகாட்டு
முள்ளுச்செடிகளாய் ...!''

ஆழமான கருத்துகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

பெயரில்லா சொன்னது…

''..நெருக்கமான உன்
நெஞ்சிற்குள்
சிறு வெடிப்புகள்
மௌனம் படிந்த
மனக்கோடுகளில்
அச்சம் முளைக்கிறது
பனிபடாமல் வளரும்
அடர்ந்தகாட்டு
முள்ளுச்செடிகளாய் ...!''

ஆழமான கருத்துகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சசிகலா சொன்னது…

உள்ளுக்குள்
இருட்டை விட இருட்டாய்
நம்பிக்கை....!

அடடா என்ன ஒரு வார்த்தைப் பிரவாகம் சமூகம் சார்ந்த கவிதைகளும் எழுதலாமே.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சதீஸ் என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் கருத்துக்கள் இட்டமைக்கும் வாழ்த்துக்கள்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் கருத்துக்கள் இட்டமைக்கும் வாழ்த்துக்கள்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சசி கலா என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் கருத்துக்கள் இட்டமைக்கும் வாழ்த்துக்கள் சமூகம் சார்ந்த கவிதைகளும் எழுதிக்கொண்டிருக்கிறேன் "" நிழல்களின் நிறங்கள் '' எனும் வலைப்பூவில் விரைவில் விலாசம் அனுப்புகிறேன்

அருணா செல்வம் சொன்னது…

அவளின் மௌனங்களின்
மொழிப் பெயர்ப்கைக்
கவிதையில் கொட்டி இருக்கிறீர்கள்.
அருமையான வரிகள்.
தொடர வாழ்த்துக்கள்.

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

சீராளன் வலைக்கின்று வருகை தந்தேன்!
சிற்பியென வடித்துள்ள கவிதை கண்டேன்!
பாராளன் என்றாலும் பாவை கண்கள்
படுத்துகிற பாடுகளைத் தாங்க வேண்டும்!
கூராளன் என்றாலும் கோதை கண்கள்
கூறுகிற மொழிகேட்டுச் சொக்க வேண்டும்!
காராளன்! கனியாளன்! என்றே போற்றக்
கவியாளன் ஓங்கிடுக! காதல் வாழ்க!

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி அருணா செல்வம் அவர்களே என் கவிதையினை ரசித்தமைக்கும் கருத்துக்கள் சொன்னமைக்கும்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் திரு.கவிஞர் .பாரதிதாசன் அவர்களே ,,,,என் கிறுக்கல்களுக்கு அழகிய கவிதைகளால் கருத்து சொன்னீர்கள் மிக்க நன்றி