சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 10 April 2013

கனாக் கண்டேன் ..!



தேயவிட்டு தினம் வளர்க்கும்
தேவையற்ற சலனம்போல் 
நேசித்த நிலவின் மடியில்
வாசித்த வாழ்க்கையிது ..!


விடலைக்குருதி மடல் எழுதி
பதிலைத் தேடி பாவை நாடி
கண்ணீர் அற்றுக் காதல்சேர  
கனிந்தோம் காலத்தீயில் ... ...!

அன்பின் ஆழம் தேடி 
அணைத்தோம் அகம் மகிழ் 
துன்பத்தை துரத்திவிடும் 
துணையானாள் ஔடதமாய் !

நோயிலும் நுதலை தொட்டு
நோதீர்த்து தூக்கம் விட்டு 
இளமையறா பாசம் தந்தாள்
இரண்டாம் கருவறை சுமந்து..!

கனவிலும் பொய்யை காணா
நினைவுகள் சுமந்தாள் நெஞ்சில் 
மனதினில் பட்டதெல்லாம்
தினம் சொல்லி தீர்த்தாள் அச்சம் ..!

மாலையின் மயக்கம் வேண்டில்
சேலையை தேடாள் வஞ்சி 
சோலைகள் பூக்கும் பூவாய் 
காலைக்கண் திறப்பாள் உண்மை..!

மார்பினில் தீண்டும் மகவின் 
மூச்சினை முகர்ந்தே சொல்வாள் 
மழலையின் மனது பேசும்
மொழியினை உணர்ந்தேன் என்று ..!

ஈருயிர் எம்மில் இல்லை 
ஓருயிர் உள்ளம் எல்லாம்
சேர்த்தது காதல் என்றே 
செழிப்புடன் வாழ்ந்தேன் என்றும்...!

உயிரின் ஊஞ்சலில் ஆடிய எம்மை 
ஊரார்வரவை உணர்த்தும் காகம்
காலையில் கரைந்து கனவினைக்கலைத்து
கடமை உணர்வை காட்டியே வென்றது..!

ஒருநாள் வாழ்ந்த ஈசல் போலே
மறுநாள் வெறுமை மனதில் சேர
தினம் தினம் வாழ்வை கேட்டேன்.
திரும்பவும் கனவை வேண்டி...!

பிரியமுடன் சீராளன் 

23 comments:

இளமதி said...

அழகிய கனவு! சிரந்த கவிதை!
வழமைபோல் கவிதையை ரசித்தேன். வாழ்த்துக்கள் உறவே!

கனவினில் கண்டவாழ்வு களிப்புமிக தந்ததென்று
நனவினில் அதை நினைத்து நலிகின்றாயோதோழா
தினம்மலர்ந்து மடிவதுதான் கனவுப் பூவுமென்றே
மனதினில் எண்ணிக்கொள் மயக்கம் தீரும்நன்றே...


வாழ்க வளமுடன்!

இளமதி said...

சிறந்த... தவறுதலாக சிரந்தவாகிவிட்டது.

பொறுத்தருள்க...

Priya said...

ஒருநாள் வாழ்ந்த ஈசல் போலே
மறுநாள் வெறுமை மனதில் சேர
தினம் தினம் வாழ்வை கேட்டேன்.
திரும்பவும் கனவை வேண்டி...! ///அருமை அண்ணா ..நிறைய பேரின் வாழ்கை நினைவை தாண்டி கனவில்தான் போகிறது.. ஆனால் கனவிற்கு ஆயுள் குறைவுதானே அண்ணா. எதார்த்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளதே.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி உயிரான உறவே இளமதி தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்

அழகிய கவிதை இட்டு
அதிலொரு நம்பிக்கை நட்டு
தெளிவாய் சொன்னீர்
அழியா அன்பை சொரிந்தே.....!

மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி தங்கையே ப்ரியா தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்


மிக்க நன்றி வாழ்க வளமுடன்

கவியாழி said...

மார்பினில் தீண்டும் மகவின்
மூச்சினை முகர்ந்தே சொல்வாள்
மழலையின் மனது பேசும்
மொழியினை உணர்ந்தேன் என்று .///அருமை

சீராளன்.வீ said...

மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வாழ்கவளமுடன்

Anonymous said...

''..தேயவிட்டு தினம் வளர்க்கும்
தேவையற்ற சலனம்போல்
நேசித்த நிலவின் மடியில்
வாசித்த வாழ்க்கையிது ..!'' நல்லவரிகள்.
இனிய வாழ்த்து.
Vetha.Elangathilakam.

சீராளன்.வீ said...


மிக்க நன்றி கோவைக்கவி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்


வாழ்க வளமுடன்

அருணா செல்வம் said...

கனவு மெய்பட்டால்
கவிதையும் மேவுறும்.

வாழ்த்துக்கள் சீராளன்.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி அருணா செல்வம்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்

சசிகலா said...

கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சசி கலா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Anonymous said...

சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.




சீராளன்.வீ said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும்.....

நன்றி வாழ்கவளமுடன்

மாலதி said...

காதலை அழகாக எவ்வளவு நேர்த்தியாக சிறந்த வரிகள்

சீராளன்.வீ said...

தங்கள் முதல் வருகையும் ,கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி மாலதி

வாழ்கவளமுடன்

http://bharathidasanfrance.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சீராளன் கண்ட செழுங்கனவு! செந்தமிழின்
பேராளும் வன்மை பெருக்கு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

சீராளன்.வீ said...

மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் வாழ்கவளமுடன்

இமா க்றிஸ் said...

இளமதி வலைப்பூ இடுகை மூலம் இங்கு வந்தேன். உங்கள் வலைப்பூ அருமையாக இருக்கிறது சீராளன்.

இந்தக் கவிதை அருமை.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி இமா

தங்கள் முதல்வருகைக்கு மகிழ்ச்சி,வழிகாட்டிய அன்புசகோதரி இளமதிக்கும் நன்றி தாங்கள்
இனிய கருத்திட்டமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

வாழ்கவளமுடன்

ஹிஷாலி said...

அழகிய கவிதை