Tuesday, 13 September 2016
Friday, 2 September 2016
Friday, 19 August 2016
Friday, 6 May 2016
Saturday, 6 February 2016
Wednesday, 27 January 2016
குருவருள் பதிற்றந்தாதி !
ஓடித் திரிந்த உணர்வுகளை ஒன்றாக்கிப்
பாடிக் களிக்கப் பகலிரவாய்ப் - பாடங்கள்
நாடிக் கொடுத்திட்ட நற்குருவுக் கோர்புகழைத்
தேடிக் கொடுப்பேன் தினம்!
1. கற்றுப் பயனடையக் காத்திருக்கும் எல்லோர்க்கும்
பற்றுடனே பாடம் பயில்விக்கும் - நற்கவிஞர்!
என்னுள் கவியும் இருப்பதைக் கண்டுணர்ந்து
நன்றே'கற் பித்தார் நயந்து!
Wednesday, 16 December 2015
உயிரோவியம்!
ஆருமறி யாமலுயிர் ஆடும் வலியூட்டும்
சாருமலர்ப் பூங்குழலி சாய்ந்துவிடத் - தீருமிதன்
பாரமொரு நாளில் பறந்திருக்கும் ! பாவையவள்
நேரமொரு நீள்கனவில் நெஞ்சு !
இதழ்முகிழும் ரோசாவோ! இன்றமிழோ! மின்னும்
நுதலழகும் நூற்பாவோ? கன்னம் - புதுக்கவிதைப்
பூவனமோ? பொய்கைமலர்ப் பூந்தாதோ? என்னவளின்
ஓவியமும் கொள்ளும் உயிர் !
Subscribe to:
Posts (Atom)






