சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday, 8 August 2013

நிலாக் காதலன்...!


காதலித்த நாள் தொடக்கம்
கருமை  உன்னில்  கண்டதில்லை
கனவுகளை தந்து செல்லும்
களவாணி  நீதானோ...!

Saturday, 13 July 2013

எனக்கான உன் காதல்...!




எனக்கான உன் காதல்
எழுதாத காவியத்தை 
கனாக்கண்ட காகிதமாய்
கற்பத்தில் வெறுமை காக்கும்...!

Friday, 12 July 2013

இருப்பாயா என் தேவதையாய்...!




ஒரு சொல் 
உயிர்வரை ஊடுருவி
மூளைக்குள் முகாமிட்டால் 
வார்த்தையல்ல அது
வாழ்வின் சரிதம்..!

Monday, 27 May 2013

எப்போதும் உன்னருகில்..!


கோபப்படும் 
உன் மூச்சைக் கூட
குளிர்மையாக்கி என்னில் 
கொட்டிச் செல்வதால்
உன்னைவிட என்னை 
ரசிக்கத்தெரிந்தவள் தென்றல்தான் ....!

Monday, 20 May 2013

உயிரின் இதழ் நீ ..!



சொந்தத்தின் பந்தத்தில்
வந்துதித்த வளர்பிறை நீ
தந்தை வழி உறவென்று
தள்ளி நின்றாய் தாய்மடியில்...!

Friday, 17 May 2013

உனக்கென இருப்பேன்...!





சந்தேக நிழல் உன்னில்
தவறி விழுந்திட 
சித்திரம் ஒன்று 
சிதைந்தது நெஞ்சில்..!

Thursday, 9 May 2013

உயிர்த்துளிகள் ..!




உயிர்த்துளி

உன் கடைசித் துளி 
கண்ணீரோடு 
எரிக்கப்பட்டதால் 
என் சாம்பல்கள் எல்லாம்
சந்தணவாசம்......!